Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க.வினரை சுட வே‌ண்டு‌ம் என பேசவில்லை: விஜயகாந்‌த்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (15:53 IST)
‌' த ி. ம ு.க.‌ வினர ை சு‌ட்டு‌த ் த‌ள் ள வே‌ண்டு‌ம் எ‌ன்ற ு நா‌ன ் பேசா த ஒ‌ன்ற ை பே‌சியதாக வே‌ண்டுமெ‌ன்ற ே ‌ தி‌ட்ட‌‌மி‌ட்ட ு ‌ தி‌ரி‌த்த ு செ‌ய்‌தி வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்ட ிரு‌க்‌கிறது' எ‌ன்ற ு த ே. ம ு.‌ த ி.க. தலைவ‌ர ் ‌‌ விஜயகா‌ந்‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' கட‌ந் த 13 ஆ‌‌ம ் தே‌த ி அன்று தே.மு.தி.க. சார்பில் ராம ே‌ ஸ்வரத்தில் தமிழக மீனவர்கள ், ‌ சி‌றில‌ங்க ா கடற்படையினரால் சுடப்பட்டுவதைக் கண்டித்து எனத ு தலைமை‌யி‌ல ் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை வெளியிட்டன. ஆனால் ஒருவார பத்திரிகை நான் அங்கு பேசாததை பேசியதாக வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20-7-08 தேதியில் வெளியிடப்பட்டுள்ள அந்த பத்திரிகையில் முதல் பக்கம் அட்டையிலேயே எனது புகைப்படத்துடன், ஆளும் தி.மு.க.வினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட் பகுதியில் வந்துள்ள செய்தி யிலும், தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல, எங்குமே பேசக் கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசாத ஒன்றை ராம ே‌ ஸ்வரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து வெளியிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டி அமைதியைச் சீர்குலைக் கும் செயலாகவும் அமைந்துள்ளது.

கடந்த 6.7.08 அன்றும் இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தை போட்டு, தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த், என்று தலைப்பிட்டு நடக்காத ‌நி‌க‌‌ழ்வ ை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளி யிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாத ு'' ‌ விஜயகா‌ந்‌‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments