Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபடக் கூடாது: ராமதா‌ஸ்!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (12:07 IST)
'' அட‌க்குமுறையை க‌ண்டு பா.ம.க.‌வின‌ர் உ‌ள்ள‌ம் கொ‌தி‌க்க‌த்தா‌ன் செ‌ய்யு‌ம். எந்த சூழ்நிலையிலும் சட்டத்துக்கு விரோதமான வன்முறை நிகழ்வதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும ்'' எ‌ன்று பா.ம.க.‌வினரை அ‌க்க‌ட்‌சி நிறுவனர் ராமதாஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், “வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருவை காவல் துறையினர் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீனில் விடக் கூடிய குற்ற பிரிவின் கீழ் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் கொலை முயற்சி புகார் சேர்க்கப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குருவை ஜாமீனில் எளிதில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் தி.மு.க. அரசின் பழி வாங்கும் வெறியையே எடுத்துக்காட்டுகிறது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து அவர்களது வீடுகளுக்குள்ளும் புகுந்து சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியின் இந்த அராஜக பழி வாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மினி எமர்சென்சி நிலையை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இந்த வரலாறு காணாத அடக்கு முறையைக் கண்டு பா.ம.க.வினரின் உள்ளம் கொதிக்கத்தான் செய்யும். அதன் விளைவாக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த துடிப்பது இயற்கை. ஆனால் அத்தகைய எந்த சூழ்நிலையிலும் சட்டத்துக்கு விரோதமான வன்முறை நிகழ்வதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சமூக விரோத சக்திகள் புகுந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது. அமைதியான வழியில் அற வழியில் உண்ணாவிரதம், தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் போன்ற வழி முறைகளை பின்பற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தலாம்.

ஆனால் கண்டிப்பாக எங்கும் வன்முறை நிகழ்வுக்கு அவை வழி வகுத்து விடக் கூடாது என்பதில் பா.ம.க.வினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இ‌ந்த பழிவாங்கும் நடவடிக்கைகளை முறியடிக்க அனைத்து சட்டப்பூர்வமான வழிகளில் பா.ம.க. ஈடுபடும ் ” எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments