Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து- ர‌யி‌ல்க‌ளி‌ல் செ‌ல்லு‌ம் அத்தியாவசிய பொருட்க‌ள்: தமிழக அரசு ஏ‌ற்பாடு!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (11:40 IST)
லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு பேரு‌ந்துக‌ள ், ரயில் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆ‌ட்‌சிய‌‌த் தலைவ‌ர்களு‌க்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் லாரிகள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் போதுமான காய்கறிகள் சென்னைக்கு வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வேலை நிறுத்தம் தீவிரமானால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

தமிழக அரசு இதனை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர்களு‌‌ம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படியும், அரசு பேரு‌ந்த ுகள், ரயில்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை அனுப்பவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், நேற்று நடு இரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக லாரி போக்குவரத்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து கிடைத்திட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆ‌‌‌ட்‌‌சிய‌ர்க‌ள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

காய்கறி மற்றும் பால் போன்ற அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாகவும் இவற்றினை கொணர ஏற்பாடுகளை செய்யுமாறும் அதற்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments