Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்ச‌த்‌‌தீ‌வி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌க்க உ‌ரிமை உ‌ள்ளது: ‌பிரதமரு‌க்கு கருணாநிதி கடிதம்!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (13:17 IST)
'' க‌ச்ச‌தீ‌வி‌ல் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்பது பற்றி இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும ்'' எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌‌கு‌க்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று எ‌ழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், தமிழக மீனவர்கள் குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம ், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியா- இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து தங்கள் பிழைப்பை நடத்தி வந்தது காலம் காலமாய் நடந்த சரித்திர உண்மை.

கடந்த 26.6.1974 அன்று இந்திய அரசும், இலங்கை அரசும் செ‌ய்து கொ‌ண்ட ஒ‌ப்ப‌ந்த‌ம் படி இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடற் பகுதியில் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதோடு இந்திய, இலங்கை படகுகள் இரு நாட்டு கடல் பகுதிகளிலும் மீன் பிடித்துக் கொள்ளலாம்.

23-3-1976- ம் ஆண்டில் ஏ‌ற்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌‌ம் படி ஏ‌ற்கனவே செ‌ய்து கொ‌ண்ட ஒப்பந்தத்தில் இல்லாத பகுதிகளில் எல்லை வரையறை செய்வதற்கு மட்டும்தான். இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் தங்கள் மீன்பிடி வலைகளை காய வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகள் நிர்வாக ரீதியான உத்தரவுகள்தான் 1974 அல்லது 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள் ளவை அல்ல. எனவே இந்த உத்தரவுகளால் அதி காரபூர்வமான இரு நாட்டு ஒப்பந்தத்தை ரத்து ஆகி விடாது. இந்த உத்தரவுகளால் நமது மீனவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களுக்கு உள்ளானார்கள். கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதினார்கள். அடுத்து எனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 17-8-2006 அன்று நமது தலைமை செயலாளர் வெளியுறவுத்துறை செயலாள ருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இதையடுத்து நான் தனிப்பட்ட முறையில் 22.9.2006 அன்று உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படியும் இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

ஆனாலும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், சுட்டுக் கொல் லப்படுவதும் தொடர்கிறது. இது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. தமிழக மக்களுக்கும் வேதனை அளிக்கிறது.

எனவே தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்பது பற்றியும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கடித‌த்‌தி‌ல் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments