Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகு‌ப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு 26 ‌ஆ‌ம் தே‌தி ஹால் டிக்கெட்!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (09:40 IST)
''10 ஆ‌ம் வகு‌ப்பு ‌சிற‌ப்பு துணை‌த் தே‌ர்வுக‌்கு வரு‌ம் 26, 27 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் தே‌ர்வு அனும‌தி ‌சீ‌ட்டுகளை (ஹா‌ல் டி‌க்கெ‌ட்) சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம ்'' எ‌‌ன்று அரசு தே‌ர்வு‌த்துறை இய‌க்குன‌ர் வச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌திக‌்கு‌‌றி‌ப்‌‌பி‌ல், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் தே‌ர்‌‌ச்‌சி அடையாத மாணவ-மாணவிகள் இந்த ஆண்டிலேயே கல்வியைத்தொடர வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு துணைத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது. இ‌ந்த தே‌ர்வை 90,300 பேர்கள் எழுதினார்கள்.

சென்னையில் 10 மையங்களில் தே‌ர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி பழனிச்சாமி பல தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய சிறப்பு துணைத்தேர்வுகள் ஜ ூன் 30 ஆ‌ம் தேதி முதல் ஜ ூலை 11 ஆ‌ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான அனும‌தி ‌சீ‌ட்டுக‌ள் ( ஹால் டிக்கெட ்) 26, 27 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அனும‌தி ‌சீ‌ட்டு களை பெற்றுக்கொள்ளலாம்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அதற்கு முந்தைய மெட்ரிக் தேர்வுகளில் தோல்வியுற்று தனித்தேர்வர்களாக எழுத தேர்வுத்துறைக்கு நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனும‌தி ‌ச ீட்டுகளை 26, 27 தேதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்பட மா‌ட்டாது எ‌ன்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments