Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஜினாமா செ‌ய்ய தயா‌ர்: அ‌ன்பும‌ணி!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:01 IST)
'' மரு‌த்துவ‌ர் ராமதாசோ, க‌ட்‌‌சியோ முடிவெடி‌த்தா‌ல் ஒரு ‌நி‌மிட‌ம் கூட ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் ‌நீ‌டி‌க்க மா‌ட்டே‌ன்'' எ‌ன்று ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற பா.ம.க. பொது‌க்குழு‌வி‌ல் ம‌த்‌திய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி பேசுகை‌யி‌ல், பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதாசோ அ‌ல்லது க‌ட்‌சியோ முடிவெடு‌த்தா‌ல் ஒரு ‌நி‌மிட‌ம் கூட நா‌ங்க‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ப‌த‌வி‌யி‌ல் ‌நீடி‌க்க மா‌ட்டோ‌ம்.

இ‌ங்கு யாரு‌‌ம் பத‌வி‌க்காக இ‌ல்லை. ம‌க்களு‌க்கு தொ‌ண்டா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் இரு‌க்‌கிறோ‌ம். ம‌க்க‌ள் ‌பிர‌ச்சனையை தொட‌ர்‌ந்து மே‌ற்கொ‌ள்வோ‌ம். ம‌க்க‌ள் ‌பிர‌ச்சனை‌க்காக போராடி வரு‌ம் ராமதா‌ஸ், செ‌‌ல்வா‌க்கு ‌மி‌க்க தலைவராக வள‌‌ர்‌ந்து வரு‌கிறா‌ர். இதை ஒரு ‌சிலரா‌ல் பொறு‌த்து‌க் கொ‌ள்ளமுடிய‌வி‌ல்லை.

‌ தி.மு.க. கூ‌ட்டண‌ி‌யி‌ல் இ‌ரு‌ந்து பா.ம.க.வை ‌நீ‌க்‌கியதா‌ல் நம‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ‌கிடையாது. முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌மீது என‌க்கு‌ம், ராமதாசு‌க்கு‌ம் த‌னி ம‌ரியாதை உ‌ண்டு. அது ‌நி‌ச்சய‌ம் தொடரு‌ம்.

அர‌சிய‌ல் ‌பிர‌ச்சனைகளு‌க்கு ராமதா‌ஸ் எடு‌க்கு‌ம் உறு‌தியான முடி‌வை ஏ‌ற்று செ‌ய‌ல்படுவோ‌ம் எ‌ன்று அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments