Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை சமூகசேவ‌கி மறைவு: கருணா‌நி‌தி இர‌ங்க‌ல்!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (18:00 IST)
இல‌ங்கை‌யி‌ல ் சமூ க சேவ‌க ி த‌ங்க‌ம்ம ா அ‌ப்பாகு‌ட்ட ி மறை‌வி‌ற்கு‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌‌ர ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் சமூக சேவகி தங்கம்மா அப்பாகுட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தங்கம்மா அப்பாகுட்டி தமிழ ் மொழியை முறைப்படி கற்று ஆசிரியராக விளங்கியவர். `தமிழ் பண்டிதை' என ஈழப்பகுதி வாழ் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர்.

நூலகம் ஒன்றை நிறுவி சிறந்த நூல்கள் வெளியிடுவதற்கும் உதவிகள் புரிந்துள்ளார். ஆசிரியை பணி சமூக நற்பணிகள் மூலம் ஈழத் தமிழ் மக்களின் அன்பிற்குரியவராக திகழ்ந்த அவரது மறைவு ஈ ழ‌ த் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இ‌வ்வாற ு கருணா‌‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments