Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ம்‌பி கு‌த்‌தி பயணிகள் 4 பேர் பலி!

வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 14 மே 2008 (12:42 IST)
ஈரோடு அருகே பேருந்துக்குள் கம்பி புகுந்ததால் நான்கு பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு அருகே உள்ளது குண்டடம். இந்த பகுதியில் காற்றாலையின் விசிறி தாங்கும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால் குங்குமபாளையத்தை நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. ஒரு வளைவில் லாரி திரும்பும்போது லாரியில் இருந்த கம்பி சரிந்து பேருந்துக்குள் புகுந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த குங்குமபாளையத்தை சேர்ந்த மோகன் (25), கார்மேகம் (17), சரோஜினி (35), நாற்பது வயது மதிக்கதக்க அடையாளர் தெரியாத வாலிபர் ஆகிய நான்குபேரும் ‌ நி‌க‌ழ்‌வி டத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 21 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ‌ விப‌‌‌த்து குறித்து குண்டடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments