Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (15:43 IST)
நெ‌ல்லை‌யி‌ல் தடு‌ப்பூ‌சி போ‌ட்ட‌ப்ப‌‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 8 மாத குழ‌ந்தை இ‌ன்று ‌சி‌க‌ி‌ச்சை பல‌‌‌னி‌ன்‌றி இற‌ந்தது.

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு முத்துநாகு என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு கடந்த 23 ஆ‌ம் தேதி மீனாட்சிபுரம் மாநகராட்சி மரு‌த்துவமனை‌‌யி‌ல் தடுப்பூசி போடப்பட்டது. ‌ பி‌ன்ன‌ர் முத்து நாகுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் கொடு‌க்க‌ப்ப‌ட்ட கா‌ய்‌ச்ச‌ல் மா‌த்‌திரையை குழந்த ை‌க்கு கொடு‌த்து‌ள்ளா‌‌ர் மு‌த்துமா‌ரி.

ஆனாலும் குழந்தை நாகுக்கு க‌ா‌ய்‌ச்ச‌ல் குணமாக‌வி‌ல்லை. தொடர்ந்து காய்ச்சல் இரு‌ந்து‌ள்ளது. நேற்று காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு வ‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

உடனடியாக குழ‌ந்தை மு‌த்துநாகுவை நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று குழந்தை முத்துநாகு பரிதாபமாக இறந்தது.

கட‌ந்த 23ஆ‌ம் தே‌தி ‌‌திரு‌வ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் தடு‌ப்பூ‌சி போ‌ட‌ப்ப‌ட்ட மூ‌ன்று குழ‌ந்தைக‌ள் இற‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments