Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி : த‌மிழக அரசு!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:12 IST)
தமிழகத்தில் மரு‌த்துவ‌ர்க‌ள் மேற்பார்வையிலேயே, குழந்தைகளுக்கு கிராம செவிலியர்கள் தடுப்பூசி போடுவார்கள் என்று பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் மரு‌த்துவ‌ர் பி.பத்மநாபன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக பத்மநாபன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தடுப்பூசி போடும் திட்டத்தில் இருந்து கிராம செவிலியர்கள் நீக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில், கிராம செவிலியர்கள் தடுப்பூசி போடுவார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மரு‌த்துவ‌ர்கள‌ி‌ன் நேரடி மேற்பார்வையில் இனி தடுப்பூசியை கிராம செவிலியர்கள் போடுவார்கள்.

இதுதவிர, தடுப்பூசி போடப்படும்போது அவசரத் தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகே அவசர ஊ‌ர்த‌ ிகள் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும், தடுப்பூசி போடப்பட்டபிறகு ஏதாவது பிரச்சினை நிகழக்கூடாது என்பதற்காக, ஊசி போட்டபின் ஒரு மணி நேரம் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளை வைத்திருக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏ‌ப்ர‌ல் 30ஆ‌ம் தே‌தி (நாள ை) தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் கொஞ்சம் பயம் இன்னமும் இருக்கக்கூடும் என்பதால், எத்தனை பேர் வருவார்கள் என்பது தெரியவில்லை. எனினும், தடுப்பூசி போடும்போது, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணம் என்ன என்பது, இமாசல பிரதேசத்தில் உள்ள கசவுலி ஆய்வு மையம் வெளியிடும் இறுதி முடிவில் தெரிந்துவிடும். இதற்கு 10 நாள்கள் வரை ஆகும். இந்த ஆய்வு முடிவு வெளியானபிறகுதான், திருவள்ளூர் சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செ‌வி‌லிய‌ர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எ‌ன்று மரு‌த்துவ‌ர் ப‌த்மநாப‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments