Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி உதவி செய்த பிறகும் போராடுவது தேவை‌யி‌ல்லாதது: முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:56 IST)
''‌ வீர‌ப்ப‌ன் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன் போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நிவாரண உத‌வி செ‌ய்த ‌பிறகு‌ம் போராடுவது தேவை இல்லாதத ு'' எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி கூ‌றினா‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. ச‌ட்டம‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஜி.கே.மண ி, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யை சே‌ர்‌‌ந்த சிவபுண்ணியம் ஆகியோர் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வேண ்‌டு‌ம்.
ஏற்கனவே சிலர் உதவி பெற்றிருந்தாலும் விடுபட்டவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருண ா‌நி‌தி கூறுகை‌யி‌ல், வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரால் சிலர் பாதிக்கப்பட்டனர். அது பற்றி அறிய நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் ஆணைய‌ம் அமைக்கப்பட்டது. அவர்கள் அறிக்கை தரும் முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது.

அதற்க ு பிறக ு ஆணைய‌ம் அறிக்க ை கிடைத்த ு, அதில ் 89 பேர ் பாதிக்கப்பட்டதாகவும ், தமிழகத்தைச ் சேர்ந் த பாதிப்புக்குள்ளானவர்களுக்க ு அறிக்கையில ் குறிப்பிட்ட ு இருந்தத ு போ ல நிவாரணமா க ஒர ு கோடிய ே 25 லட்சத்த ு 50 ஆயிரம ் ரூபாய ் கொடுக்கப்பட்ட ு ரசீதுகளும ் பெறப்பட்ட ு‌ள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும் இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விசாரணைக் ஆணைய‌ம் கொடுத்த பட்டியல்படி நிதி வழங்கப்பட்டு விட்டது. கர்நாடக அரசு தான் நிதி உதவி வழங்க வேண்டும். எனவே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்த்து தான் நடத்த வேண்டும்.

இந்த போராட்டம் பற்றி நான் கேள்விப்பட்டதும் தா.பாண்டியனை அழைத்து நிதி கொடுத்த ஆதாரங்களை காட்டினேன். தமிழக எல்லைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் கடமையை செய்து விட்டோம். அதன் பிறகும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல போராட்டம் நடத்துவது சரியான முன் மாதிரி அல்ல.

பிரச்சினை முடிந்து விட்ட பிறகு பிரச்சினை இருப்பதாக கூறி போராடுவது தேவை இல்லாதது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார ் யார ் பெயர ் விடுபட்டத ு என்ற ு தமிழ க அரசின ் கவனத்திற்க ு கொண்ட ு வந்திருக்கலாம ். அதற்கா க போராட்டம ் நடத்துவத ு நியாயம ா?

கர்நாட க அரச ு இத ை மட்டும ா கொடுக்கவில்ல ை. காவிர ி முதல ் ஒகேனக்கல ் வர ை எல்லாவற்றையும ் தான ் த ர மறுக்கிறார்கள ். அத ை உரி ய முறையில ் போராட ி பெறுவோம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments