Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் ரூ.2,300 கோடி‌யி‌ல் சிறப்பு பொருளாதார மண்டலம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:50 IST)
'' எ‌ரிச‌க்‌தி சாதன‌ங்க‌ள் தயா‌ரி‌க்க செ‌‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் ரூ.2,300 கோடி முத‌லீ‌ட்டி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌‌ண்டல‌ம் அமை‌க்க‌ப்படு‌கிறது'' எ‌ன்று ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்று எரிசக்தி துற ை, பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை மானிய கோரிக்கைகளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் அமைக்க ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை செங்கல்பட ்டி‌ல் அமைக்க எரிசக்தி மேம்பாட்டு முதன்மை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. இதில் இடம் பெறும் நிறுவன உரிமையாளர்கள் ரூ.2,300 கோடிக்கு மேலாக முதலீடு செய்வார்கள்.

தாவர சக்தி கொதிகலன் வடிகால், சிறப்பு வாயு என்ஜின்கள், சூரிய ஒளி சாதனங்கள் காற்றாலைகள் புனல் எந்திரங்கள ், கார்பன் எரி மின்கலன் ஆகியவற்றை தயாரிக்கும் 60 உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும். இதன் மூலம் 5,000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் திட்டத்தை நிகழ்வதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் மேலும் ஒரு 600 மெகாவாட் மின் திட்டம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், மத்திய பிரதேசம், மேற்கு வங ்காள‌ம ், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்று வருகிறது. இது ஜ ூல ை, ஆகஸ்டு மாதங்களில் திருப்பி கொடுக்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments