Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுழைவுத்தே‌ர்வு ர‌த்‌தி‌ற்கு தடை‌யி‌‌ல்லை: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (18:01 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் நுழைவு‌த ் தே‌ர்வ ு ர‌த்‌தி‌ற்க ு தட ை ‌ வி‌தி‌க் க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் மறு‌த்த ு ‌ வி‌ட்ட ு, வழ‌க்க ு ‌‌ விசாரணைய ை த‌ள்‌ள ி வை‌த்தத ு.

தமிழக‌த்‌தி‌ல ் மருத்துவம், பொ‌றி‌யிய‌ல், விவசாயம் போன்ற தொழில்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நுழைவுத்தேர்வு ம‌தி‌ப்பெ‌ண்ணையும், பிளஸ்-2 ம‌தி‌ப்பெ‌ண்ணையு‌ம் கணக்கிட்டு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நுழைவுத்தேர்வு முறையை தமிழக அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. பிளஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பி.முகிலாதேவி, வினோத்குமார், டி.மனோ ஆபிரகாம் ஆ‌கியோ‌ர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சமீபத்தில் மனு தாக்கல் செய்தன‌ர்.

அ‌தி‌ல், நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுதியுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது சரிதான் என்று ஏற்கனவே சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் வழங்கிய தீர்ப்பு செல்லாதது என்று‌ அறிவிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கூ‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இந்த மனுக்கள் இ‌ன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அடங்கிய முத‌ன்மை அம‌ர்வு மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அப்போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌ம ் மறுத்து விட்டது.

வழக்கு தொடர்ந்த மாணவி முகிலாதேவி சார்பில் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ் அருண் ஜேத்லி தமிழக அரசு நடப்பு ஆண்டின் தனது நிலையை தெரிவிக்க வேண்டும் என்றா‌ர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ் அஞ்சய் அர்ஜுன ா, அபி ஷேக் சிங்க்வி ஆகியோர் தமிழக அரசின் உத்தரவுக்கு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சிலர் அங்கீகாரம் அளித்துள்ளது என்றனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், அப்தாப் அலாம் ஆகியோர் தமிழக அரசுக்கு தா‌க்‌கீத ு அனுப்ப உத்தர விட்டனர்.

வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு த‌ள்‌ள ி வைத்தனர். தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் மறுத்து விட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments