Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க ஆ‌ட்‌சி‌க்கு வ‌‌‌ந்து மதுவை ஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம்: கருணாநிதி!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (12:43 IST)
ப ா.ம.க. ஆ‌ட்‌சி‌‌க்க ு வ‌ந்த ு க‌ள்ளு‌க்கட ை, ‌ பிரா‌ந்‌தி‌க் கடைகள ை ஒ‌ழி‌க்க‌‌ட்டு‌ம ். எ‌ல்லா‌ப ் பெருமையு‌ம ் அவ‌‌ர்களைய ே சேர‌‌ட்டு‌ம ் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்ற ு வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அ‌றி‌க்க ை:

தி.மு.க. அமைச்சர்கள், சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று ஒருதலைவர் கூறியிருக்கிறாரே?

தி.மு.க. அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வின் சாதாரண உறுப்பினருக்கும் சரித்திரம் மிகத் தெளிவாகவே தெரியும ்.

2011- ல் பா.ம.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சியின் முதலமைச்சர் போடுகின்ற முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வரும் ஆணையாகத் தான் இருக்குமென்றும் பா.ம.க. தலைவர் கூறியுள்ளதைப் பற்றி?

அந்த வாய்ப்பு அவருக்கு வர வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் மது விலக்கு பற்றி அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து கள்ளுக்கடை, பிராந்திக் கடைகளை ஒழிக்கட்டும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைப்பிடித்து எண்ணைக் கொப்பரையில் போட்டுத் தண்டிக்கட்டும். எல்லாப் பெருமையும் அவர்களையே சேரட்டும்.

சொல்வத ு சுலப‌ம ், ச‌ெ‌ய்வத ு கடின‌ம ்!

அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறாரே?

மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழி காட்டுத‌ல்பட ி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வந்தது. அதாவது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,600 வீதம் தான் வழங்க வேண்டுமென்று மத்திய அ ர‌ சி‌ன ் வழிகாட்டி நெறி முறைகளே கூறுகின்றது. இந்தத் தொகையைத் தான் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பே‌சியிருக்கிறார்.

த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர், பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி தொகையைப் பெற்றுத் தந்தால் அவர் தெரிவித்த ஆலோசனையை சுலபமாக நிறைவேற்றிட இயலும். சொல்வது சுலபம், செய்வது கடினம்.

ஒரு மரு‌த்துவ‌ர் சொ‌ல்ல‌க் கூடாத ு!

மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து. மயக்கமடைந்த விவசாயிக்கு முகத்தில் தெளிக்கும் தண்ணீரைப் போன்றதென்றும், இதனால் எந்தப் பலனும் இல்லை என்றும் பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ர ் ராமதாஸ் சொல்லியிருக்கிறார ே?

மயக்கம் அடைந்தவன் முகத்தில் தண்ணீரைத்தெளித்து அவனை எழுப்புவது தான் முதல் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றிய மத்திய அரசைப் பாராட்டுவது தான் மனிதநேயப் பண்ணாடு. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று ஒர ு மரு‌‌த்துவ‌ர் சொல்லக்கூடாது எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments