Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 15ஆ‌ம் தேதி முதல் அம‌ல்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (10:23 IST)
மீன்வள பெருக்கத்திற்கா க ஏப்ரல் 15 ஆ‌ம் தேதி முதல் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக திகழ்கிறது. செ‌ன்னை, ‌கா‌ஞ்‌சிபுர‌ம், திருவள்ளூர், கடலூ‌ர், விழுப்புரம், த‌ஞ்சாவூ‌ர், ந ாக‌ப்ப‌ட்டின‌ம ், புது‌க்கோ‌ட்டை, திருவாரூர், ராமநாதபுரம், நெ‌ல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பே ான்ற கடலோர மாவட்டங்களின் பொருளாதாரத்தில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்டு முழுவதும் மீன்பிடி தொழில் நடைபெறுவதால், மீன்வளம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், மீன்களின் பெருக்கத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல ், மே மாதங்களில் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடை ஏப்ரல் 15 ஆ‌ம் தேதி முதல் மே 30 வரை 45 நாட்கள் அமலில் இருக்கும். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது. அதே நேரத்தில் என்ஜின் பொருத்திய நாட்டுப்படகுகள், சிறு படகுகள், வத்தைகள், கட்டுமரங்கள் போன்றவை வழக்கம் போல் மீன்பிடிப்பில் ஈடுபடும்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் ராமேசுவரம் தீவில் மட்டும் ஆயிரம் விசைப்படகுகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலமான ஏப்ரல் 15 ஆ‌ம் தேதி முதல் மே 30 வரை கடலுக்கு செல்ல முடியாது என்பதால், மாற்று தொழிலில் ஈடுபட மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments