Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஆயுத உதவியை இந்தியா நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு தீர்மானம்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:09 IST)
‌ சி‌றில‌ங் க அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதை இந்தியா உடனே நிறுத்தவேண்டும ்'' என்று ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது தேசிய மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: ‌சி‌றில‌ங்க ராணுவத்திற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் அறிவிக்கப்படாத போரால் அங்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் ‌சி‌‌றில‌ங்க ராணுவத்தின் நடவடிக்கைகள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் சம்பவங்களால் இந்தியாவுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பலர் கொல்லப்படுவதும், அவர்கள் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு ‌சி‌றில‌ங்க அரசுக்கு நெருக்குதல்களை அளிக்கவேண்டும். தமிழ் மக்களை கொன்று குவிக்கும் ‌சி‌றில‌ங்க அரசுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை இந்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்.

பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய அரசு தமது கடலோர காவல் படை பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். இந்திய மீனவர்களின் உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும் கடல் கண்ணி வெடிகளை அகற்றுமாறு ‌சி‌றில‌ங்க அரசை வற்புறுத்தவேண்டும். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments