Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள ‌நிவாரண‌த்து‌‌க்கு கூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்க தயா‌ர்: மு‌.க‌.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (10:29 IST)
'' தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது'' எ‌ன்று உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு வரும் வழியில் திருச்செந்தூரை அடுத்த கோவில்விளையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.

547 வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. இதில் 243 வீடுகள் முழுமையாகவும், 304 வீடுகள் பகுதி அளவும் சேதம் அடைந்து உள்ளது. ஆறு, ஏரி, குளங்களில் 9 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. 270 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் அடைந்து உள்ளன.

மழை வெள்ளத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு லட்சமும், மாடுகள் இறந்தால் ரூ.10 ஆயிரமும், ஆடு இறந்தால் ரூ.1,000மும், குடிசை வீடுகளுக்கு ரூ.2 ஆயிரமும், பயிர் சேதங்களுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் எண்ணை, வேட்டி-சேலை வழங்கப்படுகிறது.

தொடர்ந்து சேத விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது.

தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என எந்த விவசாயிடம் இருந்தும் புகார் வரவில்லை. சிலர் மலிவான அரசியலுக்காக அவ்வாறு கூறி வருகின்றனர் எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments