Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள விவசாயிகளு‌க்கு இழப்பீடு: விஜயகாந்த்!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (10:39 IST)
தமிழகத்தில் தொட‌ர்‌ந்த ு பெய்து வரும் க ன மழையால் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள விவசாயி களு‌க்கு இழ‌‌ப்‌பீடு வழ‌ங்க வேண்டும் என்று த ே.மு.‌தி.க. தலைவர் விஜயகாந்த் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இது குறித்து அவ‌ர ் வெளியிட்டுள்ள அறிக்கையில ், கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக குடிசை பகுதி மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறுவடையை எதிர்நோக்கியிருந்த நெற்பயிர், உளுந்து, வேர்கடலை முதலிய பருப்பு வகைகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. வாழை, கரும்பு போன்றவையும் சேதமடைந்துள்ளன. முந்திரி, மாமரம் போன்ற மரங்களும் காய்க்க வேண்டிய இந்த பருவத்தில் கனமழையால் பூக்களை இழந்து நிற்கின்றன. ஏழை மக்கள் வேலைக்கு போக முடியாமலும், இருக்கின்ற குடிசைகளை இழந்தும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளும், விவசாயிகள் இழந்துள்ள மகசூலுக்கு இழப்பீட ு‌ தந்தும் மீண்டும் விவசாயம் செய்ய விதை, உரம் போன்ற உதவிகளை செய்தும் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ‌‌விஜயகா‌ந்‌‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments