Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழைக்கு 11 பேர் பலி

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (10:45 IST)
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் க ன மழையின் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல ் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நில ை, மேற்கு நோக்கி நகர்ந்த ு, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால ், தமிழகத்தின் தென ் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்ட ு வருகிறது.

தஞ்சாவூர ், நாகப்பட்டினம ், புதுக்கோட்ட ை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும ், திருச்ச ி, திருநெல்வேல ி, தூத்துக்குட ி, ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பா க, தென் தமிழகத்தில் பெய்த ு வரும் தொடர்மழையால ், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் நீர் நிரம்ப ி வழிந்தும் காணப்படுகின்றன.

மதுரை அருகே உள்ள வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி வைகை அணையில் 66.5 அடி தண்ணீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 72 அடி. அணைக்கு விநாடிக்கு 5,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்ற நிலை உள்ளது. வைகை ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குட ி, நெல்ல ை, திருச்ச ி, தஞ்ச ை, கோவ ை, ஈரோட ு, சேலம ், நாமக்கல ், கிருஷ்ணகிர ி, தர்மபுர ி, வேலூர ், திருவண்ணாமல ை, கடலூர ், மதுர ை, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழ ை பெய்ததால ், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள ன; பயிர்கள ் சேதமடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உள்ளிட் ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில ், ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம ் சூழ்ந்துள்ளதால ், ஆற்றையொட்டி வசிக்கும் மக்கள ், பாதுகாப்பான இடங்களில் தங் க வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணா த அளவில் கடந்த இரு நாட்களாக மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால ், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களில் நீர் தேங்கி உள்ளது. இவை பெரும் பாதிப்புக்குள்ளாயின.

இம்மாவட்டங்களில் போக்குவரத்து வெகுவா க பாதிக்கப்பட்டிருப்பதால ், நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில ், தமிழகம் மற்றும ் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானில ை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழ ை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய ே, தமிழகத்தில் கன மழையினால ் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்த ு மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments