Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.9,792 கோடி!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:39 IST)
சட்டப் பேரவையில ் இன்ற ு தாக்கல ் செய்யப்பட் ட நிதிநிலை அறிக்கையின்பட ி, தமிழக அரசின ் நிதி பற்றாக்குற ை 9 ஆயிரத்த ு 792 கோடிய ே 30 லட்சம் ஆகு‌ம்.

சட்டப் பேரவையில ் நித ி அமைச்சர ் க. அன்பழகன ் தாக்கல ் செய் த தமிழ க அரசின ் ஒட்டுமொத் த நிதிநில ை அறிக்க ை:

2008-2009 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.51,505.62 கோடி எனவும், ஏற்படக்கூடிய வருவாய் செலவினங்கள் ரூ.51,421.57 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட அரசின் மூலதனச்செலவு ரூ. 9,876.35 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.9,792.30 கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்.

இது 2003 ஆம் ஆண்டு தமிழக நிதிநிலைப் பொறுப்புடமைச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை குறியீட்டை விட, அதாவது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தை விட, குறைவாகவே உள்ளது என்பதை குறிப்பிட வேண்டுகிறேன்.

பொதுக் கணக்கின் நிகரத்தோடு எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்தப் பற்றாக்குறை ரூ.2.19 கோடியாக இருக்கும். செலவினங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தும் வரிவசூலை மேம்படுத்தியும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை (கோடி ரூபாயில்)

மொத்த வருவாய் வரவுகள் ரூ.51,505.62
வருவாய் செலவினங்கள் (-) ரூ.51,421.57
அரசின் மூலதனச்செலவு (-) ரூ. 9,876.35

==========
நிதிப்பற்றாக்குறை = ரூ. 9,792.30
===========
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments