Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களவை தே‌ர்த‌‌‌ல்: த‌மிழகத்தில் போட்டியில்லை!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (18:53 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து மா‌நில‌ங்களவை‌க்கு ஆளும், எதிர்கட்சிகளின் சார்பில் 6 பே‌ர் ம‌ட்டுமே வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் அனைவரு‌ம் மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்களாக போ‌ட்டி‌யி‌ன்‌றி தே‌ர்வு செ‌ய்ய‌ப்படுவது உறு‌தியா‌கி‌‌வி‌ட்டத ு.

மா‌நில‌ங்களவை‌த் தே‌ர்த‌லி‌ற்கான வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் இ‌ன்று மாலை 3 ம‌ணியுட‌ன் முடிவடை‌‌ந்த ‌நிலை‌யி‌ல், அர‌சி‌ய‌ல் க‌ட்‌சிக‌ள் சா‌ர்‌பி‌ல் 6 வே‌ட்பு மனு‌க்க‌ள் ம‌ட்டுமே தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல் அ‌திகா‌ரியு‌ம ், ச‌‌ட்டசபை செயலருமான செ‌ல்வரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இதனா‌ல் அ‌ந்த 6 வே‌ட்பா‌ள‌ர்களு‌ம் போ‌ட்டி‌யி‌ன்‌றி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்பட உ‌ள்ளன‌ர ்.

மா‌நில‌ங்களவை தே‌ர்த‌ல் மா‌ர்‌ச் 26‌ம் தே‌தி நடைபெ‌ற உ‌ள்ளத ு. இ‌தி‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து 6 பே‌ர் தே‌ர்வு செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன‌ர ். இத‌‌ற்கான வே‌ட்பு மனு தா‌க்க‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் 8‌ம் தே‌தி தொட‌ங்‌கியத ு. வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்ய இ‌ன்று கடை‌சி நாளா‌கு‌ம ்.

தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசு‌க்கு தலா 2 இட‌ங்களு‌ம ், மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் க‌ட்‌சி‌க்கு ஒரு இட‌மு‌ம் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த ி. ம ு.க. வைச் சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் ஆ‌கியோ‌ர் ஏ‌ற்கனவே மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், காங்கிர‌ஸ் க‌ட்‌சி சா‌ர்‌‌பி‌ல் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆ‌கியோ‌ர் ‌இ‌ன்று வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நா.பாலகங்கா வே‌ட்பு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக, அ.இ. அ. த ி. ம ு.க. கூட்டணியில் 2வது வேட்பாளரை நிறுத்த தோழமை கட்சியான ம.தி.மு.க. மறுத்துவிட்ட நிலையில், தோழமை கட்சிகளைச் சேர்ந்த யாராவது ஒருவரை நிறுத்த அ.இ. அ. த ி. ம ு.க. தலைமை முடிவு செய்து‌ள்ளதாக அர‌சி‌ய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments