Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கள ராணுவம் தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு முத‌ல்வ‌ர் கடிதம்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (13:49 IST)
கடலு‌க்கு ம‌ீ‌ன் ‌பிடி‌க்க செ‌ல்லு‌‌ம் த‌மிழக ‌‌மீனவ‌ர்களை ‌சி‌ங்கள ராணுவ‌ம் தா‌க்குவதை தடு‌‌த்து ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் மீனவர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுவதால் மீனவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உணர்கிறார்கள். இது மிகுந்த வேதனையைத் தருகிறது. நேற்று கூட 62 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை நடுக்கடலில் சிறை பிடித்து தவிக்க வைத்துள்ளது.

இது தமிழக மீனவர்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கி இருக்கிறது. எனவே இலங்கை ராணுவம் மனம் போன போக்கில் நியாயம் இல்லாமல் தமிழக மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்து வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழக மீனவர்கள் நடத்தும் போராட்டங்கள் சில சமயம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதைத் தடுக்க தமிழக கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடல் கண்காணிப்பு பணியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அனைவரிடமும் இந்திய கடல் எல்லையைத் தாண்டி செல்லக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தியபடி உள்ளோம். ஆனால் மீனவர்கள் அதிகம் மீன் கிடைக்கும் பகுதிக்கு சென்று விடுகிறார்கள். கச்சத்தீவு சுற்றுப் பகுதிகளில் தான் அதிக மீன் வளம் உள்ளது. இங்குதான் தமிழக மீனவர் கள் காலம், காலமாக மீன் பிடித்து வருகிறார்கள்.

ஒரு வேளை தமிழக மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று விட்டாலும், அவர்களை இலங்கை ராணுவத்தினர் சர்வதேச விதிகளின்படி மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். அதை விடுத்து துப்பாக்கியால் சுடக்கூடாது. அத்தகைய வன்முறையை கைவிட வேண்டும்.

எனது இந்த வேண்டுகோள்களை உடனடியாக போர்க் கால அடிப்படையில் நிறைவேற்றினால் நான் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன். மேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசின் உணர்வையும், வேதனையையும் மத்திய வெளி யுறவுத் துறை மூலம் இலங்கை அரசுக்கு தெரிவிக்கலாம். கடலுக்குள் வழி தவறி எல்லை தாண்டி சென்று விடும் தமிழக மீனவர்களிடம் சிங்கள ராணுவம் மனிதாபி மானத்துடன் நடந்து கொள் வதை உறுதி செய்ய வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ‌ எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கடி‌த‌த்‌தி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments