Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (10:50 IST)
சென்வாட் வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள ் திங்கட்கிழம ை அடையா ள வேலைநிறுத்தம ் செய்கின்றனர ்.

இந் த வேல ை நிறுத்தம ் குறித்த ு சிவகாசிய ை தலைமையிடமா க கொண்ட ு இயங்கும ் அனைத்திந்தி ய தீப்பெட்ட ி உற்பத்தியாளர ் சங்கம ் கூறியிருப்பதாவத ு.

தற்போது விதிக்கப்படும் சென்வாட் (மத்தி ய மதிப்ப ு கூட்டு வர ி) முறையால ், சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ரூ. 120 கோடி அளவுக்கு வரி செலுத்தாமல் தப்பிப்பதற்கு வழி செய்கிறது.

தீப்பெட்ட ி தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை சில தயாரிப்பு செய்முறைகள் கைத்தொழிலாகவும், சில தயாரிப்புகள் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யப்படுகின்றன.

அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் தீக்குச்சிகளை அடுக்குதல், மருந்து தேய்த்தல் ஆகியப் பணிகள் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சில தொழிற்சாலைகள் தேய்த்த தீக்குச்சிகளை பெட்டிக்குள் அடைப்பதையும் இயந்திரமாக்கி விட்டன.

இந்நிலையில் அமைப்பு சாராத சிறு தொழிற்சாலைகளும் இயந்திரத்தின் மூலம் தீக்குச்சிகளை உற்பத்தி செய்து, அவற்றை வணிக புறச்சேவை முறையில் சிறிய தொழிற்சாலைகள் மூலம் தீப்பெட்டிகளாக்கி, கையினால் செய்த தீப்பெட்டி எனக் கூறி வரி விதிப்பிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.

அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளுக்கும், அமைப்பு சாராத தொழிற்சாலைகளுக்கும் தயாரிப்பு அளவைப் பொறுத்தவரை சிறிய வேறுபாடே உள்ளது.

2003- ம் ஆண்டு வரை தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யப்படும் எண்ணிக்கைக்குத் தக்கவாறு வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் விலைக்குத் தக்கவாறு, சென்வாட் வரி விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

மின் சக்தியைப் பயன்படுத்தாமல் தயாரிப்பு முறைகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இதை அமைப்பு சாராத தொழிற்சாலைகள் தவறாக பயன்படுத்தி வரிச் சலுகையை பெற்றுவருகின்றன.

எனவே உண்மையாக வரி செலுத்துகின்ற தயாரிப்பாளர்களின் நலன் கருதி தற்போதுள்ள 12 சதவீத சென்வாட் வரியை, 4 சதவீதமாகக் குறைக்கவேண்டும்.

சிறு தொழில்களுக்கு அளிக்கப்படும் முழு வரிச் சலுகையைத் தவிர்த்து, அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் 4 சதவீத சென்வாட் வரியை விதிக்கவேண்டும் என்ற ு கூறியுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments