Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவரை கொன்றது ‌சி‌றில‌‌ங்கா கடற்படைதான்: மீனவர் சங்க தலைவர்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (13:46 IST)
'' த‌மிழக ‌மீனவ‌ரை சு‌ட்டு‌க் கொ‌ன்றது ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர்தா‌ன்'' எ‌ன்று ‌ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் ‌தி‌ட்டவ‌ட்டமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ராம ே‌ஸ ்வரம் மீனவர் சங்கத்தலைவர் அந்தோணி க ூறுகை‌யி‌ல், ராம ே‌ஸ ் வர‌ம் மீனவர் கிறிஸ்டியை சுட்டது ‌ சி‌றில‌ங்கா கடற்படை அல்ல என்று ‌ சி‌றில‌ங்கா தூதரகம் கூறுவது முற்றிலும் பொய். தாக்குதல் நடத்துவதும் பின்னர் மறுப்பதும் காலம் காலமாக இது தொடர்ந்து வருகிறது.

1992 ஆம் ஆண்டு கச்சத்தீவு அருகே த‌மிழக மீ னவ‌ர்க‌ள் ‌மீ‌ன் பிடித்துக்கொண்டிருந் தபோது ‌சி‌றில‌ங்கா கடலோர காவல் படையினர் நட‌த்‌திய கண்மூடித்தனம ான தா‌க்குத‌‌லி‌ல் 3 மீனவர்கள் பல ியா‌‌யின‌ர ். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இதையு‌ம் ‌சி‌றில‌ங்கா அரசு மறுக்கத்தான் செய்தது.

1983 ஆம் ஆண்ட ி‌ல ிருந்து தற்போது வரை 86 படகுகளை ‌ சி‌றில‌‌ங்கா கடற்படையினர் அழித்து உள்ளனர். அதையும் மறுக்கத்தான் செய்தார்கள். இது ப‌ற்‌றி நட‌ந்த ‌விசாரணை‌யி‌‌ன் முடி‌வி‌ல் சுனாமி தாக்குதலில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று கூறிவிட்டனர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியான மண்டபம், தொண்டி, மல்லப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டப்பட்டிணம், நாக ை, கோடியக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ‌ சி‌றில‌ங்கா கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனை தடுக்க கச்சத்தீவை மீட்டு தரவேண்டும்.

நாம் அதனை சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்திய மீனவர்களை கச்சத்தீவு அருகே வரவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் பழி விடுதலைப்புலிகள் மீது போடப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது எ‌ன்று ராம ே‌ஸ ்வரம் மீனவர் சங்கத்தலைவர் அந்தோணி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments