Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் நியமனம்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (11:05 IST)
தமிழகத்தில் நடக்க இருக்கும் டெல்லி மேல்சபை எம்.பி. தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளரை இந்திய தேர்தல் ஆணைய‌ம் நியமித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கையில ், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் மாதம் முடிவடைவதால், அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணைய‌ம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, மார்ச் 8 ஆ‌ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15 ஆ‌ம் தேதியாகும். 17 ஆ‌ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு 19 ஆ‌ம் தேதி கடைசி நாள். 26 ஆ‌ம் தேதி வாக்குப்பதிவு நாள் (தேவைப்பட்டால்). அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மார்ச் 29 ஆ‌ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்.

தமிழக சட்டமன்றச் செயலாளரை (எம்.செல்வராஜ்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணைய‌ம் அறிவித்துள்ளது. சட்டசபை துணைச் செயலாளர், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

8 ஆ‌ம் தேதி முதல் 15 ஆ‌ம் தேதி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்யலாம் (9 ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை). வாக்குப்பதிவு தேவைப்பட்டால் 26 ஆ‌ம் தேதி சட்டமன்ற குழுக்கள் அறையில் நடக்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments