Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊனமுற்றோர்க்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (18:55 IST)
தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலமாக ஊனமுற்றோர ், அவர்களத ு குடும்பத்தினருக்க ு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்ற ன.

தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஊனமுற்ற நபர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற தகுதி பெற்றவர்கள ். இவர்கள ் விபத்தில் இறந்தாலோ அல்லது கை, கால் இழந்தாலோ அல்லது காயமுற்றாலோ மருத்துவர் மதிப்பீடு செய்யும் விழுக்காட்டின்பட ி, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும ். ஊனமுற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை வழங்கப்படும ்.

திருமண உதவி தொகையாக ரூ.2,000-ம ், பிரசவத்திற்கு மாதம் ரூ.1,000 வீதம் 6 மாதத்திற்கு ர ூ.6 ஆயிரமும், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பிற்கு ரூ.3,000, மூக்கு கண்ணாடிக்கு ரூ.500, இயற்கை மரணத்திற்கு ரூ.5 ஆயிரம் ஈமச்சடங்கு செலவுகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் ஊனமுற்ற நபர்கள், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மை ய அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம ். தகுதியுள்ளவர்களுக்க ு தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் ஜெயா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?