Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாய‌ம் தரு‌ம் தொ‌‌ழிலா‌கி‌வி‌ட்ட அர‌சிய‌ல்- ஆர்.நல்லகண்ணு வேதனை!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (18:41 IST)
நாட்டிற்க ு சேவ ை செய்யும ் வகையில ் இருக் க வேண்டி ய அரசிய‌ல், தற்போது ஆதாய‌ம் தரு‌ம் தொ‌ழிலாக மா‌றி‌வி‌ட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூ‌த் த தலைவ‌ர் ஆர்.நல்லகண்ணு வேதனை தெரிவித்தார்.

சென்னை பல்கலைகழகத்தில் நேற்ற ு நடந் த ' ஜீவா' நூல் வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூ‌த்த தலைவரு‌ம் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருமான நல்லகண்ணு கலந்துகொண்டு பேசியதாவது:

அரசியல் என்பது நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றம், கலாசார மாற்றங்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய உண்மையான செயல்பாடுகளுக்காக அரசியல் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. அரசியல் என்பது ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டது. இது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் தன்னலம் கருதாமல் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுள்ளனர். அவர்கள் கண்ட கனவு, லட்சியம் ஆகியவற்றுக்கு எதிராக இன்றைய அரசியல் நிலை உள்ளது.

தன்னலம் கருதாமல், நாடுதான் தன்னுடைய சொத்து என்று வாழ்ந்தவர் ஜீவா. தனது 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி நாட்டுக்காக தன்னை 40 ஆண்டுகள் அர்ப்பணித்துக் கொண்டவர். 56 ஆண்டுகள் வாழ்ந்த ஜீவாவைப் பற்றி இதுவரை 500 நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பற்றாளர், இலக்கியவாதி, பாடலாசிரியர், சிறந்த அரசியல்வாதி, பகுத்தறிவாளர் என பன்முகப் பார்வையோடு திகழ்ந்தவர்.

கடந்த 1953-ம் ஆண்டிலேயே கட்டாய தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தினார். அதேபோல, 1860-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது சேது சமுத்திர கால்வாய் திட்டம். ஆனால் இன்றைக்கு சிலர் அதை எதிர்க்கின்றனர். தமிழகத்துக்கு பெரிதும் பயனளிக்கும் இத்திட்டத்தை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் - எதற்காக?

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ: கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Show comments