Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளித்தலை ஆசிரியை கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (15:51 IST)
குளித்தலை ஆசிரியை மீனாட்சி கற்பழித்த ு, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால ், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதியாகியுள்ளது.

குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாராக பணிபுரிந்து வந்த மீனாட்சி கடந்த 2004 அக்டோபர் 19-ம் தேதி காணாமல் போனார். இது குறித்து நடந்த விசாரணையில ், ஆசிரியை மீனாட்சி கற்பழிக்கப்பட்ட ு, கொலை செய்யப்பட்டதும ், அவரது உடல் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல ், குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 71 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில ், இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டத ு. எனவ ே, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டத ு.

இதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம ், எஸ்.பழனிவேலு ஆகியோர் அடங்கிய உயர் ‌நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போத ு, மனுதாரர் தரப்பு வாதங்கள் ஏற்பதாக இல்லாததால் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த ு, கீழ் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments