Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ‌விழு‌க்காடு க‌ட்ட குறை‌ப்பு தூ‌‌ங்கு‌ம் வச‌தி கொ‌ண்ட வகு‌ப்பு‌க்கு பொரு‌ந்தாது!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (11:08 IST)
5 ‌ விழு‌க்காட ு கட்டணக் குறைப்பு என்பது சாதார ண, மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது எ‌ன்று ரயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய ரயில்வே அமை‌ச்ச‌ர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் கூறுகை‌யி‌ல், 5 ‌விழு‌க்காடு கட்டணக் குறைப்பு என்பது சாதார ண, மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

ரயில்கள் பிரபலமான ரயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரயில்கள் இயங்குகின்றன. இந்த ரயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 ‌ விழு‌க்காடு கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

பிரபலமான ரயில்களில் இது 3.5 ‌ விழு‌க்காடு கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரயில்களில் இதே அளவு கட்டணச் சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும். விரைவில் ரயில்வே இலாகா பிரபலமான ரயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 ‌ விழு‌க்காடாக இருக்கும்.

தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 ‌ விழு‌க்காடு கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரயில்களில் பயணம் செய்வார்கள் எ‌ன்று மா‌த்தூ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments