Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகள் நியமன முறையை மாற்றக்கோரி மார்ச் 8ஆ‌ம் தே‌தி தி.க. ஆர்ப்பாட்டம்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:49 IST)
நீ‌திப‌திக‌ள் ‌நியமன முறையை மா‌ற்ற‌க் கோ‌ரி மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தி ‌திரா‌விட‌ர் கழக‌ம் சா‌ர்‌பி‌ல் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ‌‌கி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில ், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தற்போதுள்ள 26 நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். தற்போது நீதிபதிகள் நியமனத்தில் `கொலிஜியம்' முறையில் மூத்த 3 நீதிபதிகளே முடிவு செய்யும் முறை உள்ளது. இது மாற்றப்படவேண்டும்.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கும், கடிதம் எழுதியோ அல்லது தொலைபேசியில் பேசியோ உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டுவர வற்புறுத்தவேண்டும்.

இ‌க ்கோரிக்கையை வலியுறுத்தி சென்ன ை, மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 8 ஆ‌ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ‌‌கி.‌‌வீரம‌ணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments