Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌‌ரி‌க்‌கிறோ‌ம் எ‌ன்பது பொ‌ய்யான கு‌ற்ற‌ம்சா‌ற்று: கருணாநிதி!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (15:43 IST)
'' விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் ஜெயல‌லிதா மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார்'' முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா தனது சொந்த தொலைக்காட்சிக்கு தானே அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றினை அனைத்து ஏடுகளும் முக்கியத்துவம் தராத நிலையில், ஒரு நாளிதழ் மட்டும் அந்தப் பேட்டியினை முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றது. அந்தப் பேட்டியிலே அந்த அம்மையார் எனக்கொரு சவால் விடுத்திருப்பதாக வந்த செய்தியில் "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் ஆகாது என்று பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்தத் தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?'' என்று கேட்டதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

16-12-2003 அன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி.மாத்தூர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா கேட்டுள்ள வினா பற்றி நீதிபதிகள் தெரிவித்திருக்கும் பகுதி வருமாறு:

" நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடா சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ள போது, ஒரு நபர் "பகிரங்கமாக அறிவிப்பதாலோ'' (20வது பிரிவின் கீழ் உள்ளபடி) அல்லது "ஆதரவைக் கோரினாலோ'' அல்லது "ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ, அல்லது ஏற்பாடு செய்ய உதவினாலோ அல்லது "ஒரு கூட்டத்தில் பேசினாலோ'' (21வது பிரிவு), ஒரு பயங்கர வாத அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலைச் செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்ப அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

எனவே 20 அல்லது 21 அல்லது 22வது பிரிவுகளின் கீழ் குற்றம் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். ஒரு நபர் பயங்கரவாதச் செயலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அல்லது பயங்கர வாதச் செயலைச் செய்ய உதவும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் அல்லது செய்து முடிக்க உதவி செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே, இந்தப் பிரிவுகள் பொருந்தும். இந்த முறையில் இந்தப் பிரிவுகள் புரிந்து கொள்ளப்பட்டால் தவறாகப் பயன்படுத்துகிற வழி இருக்காது''என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூற்று தவறு என்பதற்கும், நான் பேரவையில் கூறியது உண்மையானது என்பதற்கும் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள் போதும் என்பதை இதனைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார். புள்ளி விவரங்களை ஆதாரப்பூர்வமாக அவைநடுவே எடுத்துக் காட்டிய பிறகும் அம்மையார் ஜெயலலிதா ஆவேசமாக அலறுகிறார், ஆட்சியைக் கலை, கலை என்று அண்டப்புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறார்.

என் செய்வத ு! சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர கூட மஞ்சத்தில் அவர் சயனித்திருப்பதற்கும் சகல சௌபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி. அதனால்தான் மத்தியில் உள்ள அரசைப் பார்த்து கூப்பாடு போடுகிறார் உதவி, உதவி, உதவி, உதவி என்று மக்கள் பணியே மகேசன் பணி என்று தொண்டாற்றும் இந்த மண்ணின் மைந்தர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டுமாம்! மக்களின் தலைகளை உருட்டிப் பந்தாடிய மாபாவிகள் மீண்டும் மகுடம் புனைய வேண்டுமாம் இதை ஏற்றுக் கொள்ள எமது தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்த சோணகிரிகள ா? இளித்தவாயர்களா? இல்லை, இல்லை, இல்லை எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments