Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌பிர‌ச்சனை நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ல் எழு‌‌ப்புவோ‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (10:17 IST)
விடுதலைப் புலிகளின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப நாட்டின் பாதுகாப்பில் நம்பிக்கையுள்ள கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஜெயல‌லிதா கூறுகை‌யி‌ல், விடுதலைப் புலிகள் தொடர்பான விஷயங்களில் த ி. ம ு. க அரசு மென்மையான போக்கைக் கடைப்பிட ி‌க்‌கிறது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள ், கட்சிகள் மீது கூட எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு அதே நாளில் விடுதலையும் செய்யப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவில் உள்ள உல்பா, நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்க முடியாது. அந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலைப் புலிகளை கொன்று குவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றமாக ாது என்று பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்த தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு வைகோ ஜாமீனில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார், அவர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப நாட்டின் பாதுகாப்பில் நம்பிக்கையுள்ள கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments