Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ர்மபு‌ரி து‌ப்பா‌க்‌கி கொ‌ள்ளை: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (11:18 IST)
த‌ர்மபு‌ர ி அரு‌கி‌ல ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் கொ‌ள்ளையடி‌க்க‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌‌த்த ு அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "9.2.2008 அன்று அதிகாலை தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை வெகு எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு `410' மஸ்கட் ரக துப்பாக்கிகள், ஒரு `303' ரக துப்பாக்கி உட்பட ஆறு துப்பாக்கிகள், துப்பாக்கியில் பொருத்தக்கூடிய குத்துவாள், மற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.

மேற்படி மர்மக் கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு, நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் காவல் நிலைய அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, காவல் நிலைய அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு ஏதேனும் புகார் கொடுத்தார்கள ா? அப்படி புகார் ஏதேனும் கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்ல ை? நடவடிக்கை எடுக்க யாராவது தடையாக இருந்தார்களா?

1998 ஆம் ஆண்டு காட்டுக் கொள்ளையன் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம், வெள்ள ி‌ த்திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போது, காவல் துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். தற்போது நடைபெற்ற சம்பவத்தில் எதிர்தாக்குதல் கூட காவல் துறையால் நடத்தப்படவில்ல ை" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments