Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி‌நீ‌‌ர் க‌‌ட்டண உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: அ.இ.அ.‌தி.மு.க. அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (13:37 IST)
செ‌ன்ன ை மாநரா‌ட்‌சி‌யி‌ல ் உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள குடி‌நீ‌ர ், க‌‌ழிவ ு‌ நீ‌ர ் இணை‌ப்புகளு‌க்கா ன க‌ட்ட ண உய‌ர்வை‌க ் கை‌விட‌க ் கோ‌ர ி செ‌ன்னை‌யி‌ல ் நாள ை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " குப்பை அள்ளுதல் முதல் அனைத்து அடிப்படைப் பணிகளும் சென்னை மாநகரில் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அதே சமயத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் குடிநீர் இணைப்ப ு, கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை 47 விழுக்காடு முதல் 284 விழுக்காடு வரை உயர்த்தி தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எனது ஆட்சிக் காலத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்ட மக்களுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த கழிவு நீர் இணைப்பு வசதி தற்போது மறுக்கப்பட்டு வருவதா க‌ த ் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் சென்னை மாநகர மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

புதிய இணைப்புகள் வேண்டி விண்ணப்பிக்கும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இணைப்பை பெறுவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். சென்னைவாழ் மக்களின் தலையில் நிதிச் சுமையை சுமத்தி இருக்கும் தி.மு.க. அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகர மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்தி இருக்கும் திமு.க. அரசைக் கண்டித்தும், கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை உடனடியாக கைவிடக் கோரியும், வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

Show comments