Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்இணைப்பு வழங்க லஞ்சம்: பொறியாளர்கள் கைது!

வேலு‌ச்சா‌‌‌மி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (14:41 IST)
ஈரோட ு மாவ‌ட்ட‌ம், கோ‌பிசெ‌ட்டிபாளைய‌‌த்‌தி‌ல ் ‌‌‌ மி‌ன்சா ர இணை‌ப்ப ு வழ‌ங் க ல‌ஞ்ச‌ம ் வா‌ங்‌கி ய ‌ மி‌ன்வா‌ரி ய பொ‌றியாள‌ர்கள ை ல‌‌ஞ் ச ஒ‌ழி‌ப்பு‌த்துற ை காவ‌ல‌ர்க‌ள் கைத ு செ‌ய்தன‌ர ்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை கோபியைச் சேர்ந்தவர் ராமாயம்மாள் (50). இவருக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு போர்வெல் அமைத்து மின்மோட்டார் பொறுத்த, கோபி மின்வாரியத்தில் விண்ணப்பித்‌திரு‌ந்தா‌ர்‌.

‌‌ மி‌ன் இணை‌ப்பு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ரூ.5,000 பண‌ம் ல‌ஞ்சமாக தர வே‌ண்டு‌ம் எ‌ன்று உதவி செயற்பொறியாளர் விஸ்வராஜ் (49), இளநிலை பொறியாளர் கேசவன் (50), போர்மேன் பழனிச்சாமி (40) ஆகியோர் கேட்டனர்.

இது கு‌றி‌த்து ராமாய‌ம்மா‌ள் ல‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு துறை‌‌யி‌ல் புகா‌ர் செ‌ய்தா‌ர். இதையடு‌த்து அவ‌ர்களை கையு‌ம் களவுமாக ‌‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் முடிவு செ‌ய்தன‌ர். இதையடு‌த்து ரூ.5,000 ல‌ஞ்ச‌ம் தருவதாக ராமாய‌ம்மா‌ளிட‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். லஞ்ச ஒழிப்புத் துறை‌யின‌ர் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை கேசவனிடம் வழங்கினார். அவ‌ர் ரூ.2 ஆயிரத்தை விஸ்வராஜிடமும், ரூ.3 ஆயிரத்தை பழனிச்சாமியிடமும் பிரித்துக் கொடுத்தார்.

அ‌ப்போது, மறைந்திருந்த டி.எஸ்.பி. கண்ணம்மாள், காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ராஜா, லஞ்ச ஒழிப்பு‌த் துறை காவல‌ர்க‌ள், 3 பேரையு‌ம் கையு‌ம் களவுமாக ‌பிடி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments