Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹால‌ந்‌தி‌ல் இரு‌ந்து சீனா‌வி‌ற்கு சை‌க்கிளில் செ‌ல்லு‌ம் தம்பதிகள்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (14:29 IST)
ஹால‌ந்‌தி‌ல் இரு‌ந்து சீனா‌வி‌ற்கு சை‌க்கிளில் பயணம் செய்யும் தம்பதிகள் சத்தியமங்கலம் வந்தனர்.

ஹால‌ந்து நாட்டை சேர்ந்தவர் கோன் டெம்மர் (37). இவரது மனைவி டைனி வெர்கடி (27). இவர்கள் ஏதாவது சாதிக்கவேண்டும் என திட்டமிட்டனர். அதன்படி தங்கள் நாட்டில் இருந்து சீனா‌வி‌ற்கு சை‌க்கிளில் செல்லலாம் என முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் தனித்தனி சை‌க்கிளில் தங்கள் பயணத்தை தொடங்கின‌ர்.

webdunia photoWD
ஹால‌ந்‌தி‌ல் இருந்து ஐரோப்பாவை சேர்ந்த ஐந்து நாடுகளையும், ஆப்ரிக்காவை சேர்ந்த 24 நாடுகளையும் கடந்துள்ளனர். ‌பி‌ன்ன‌ர் இலங்கைக்கு வந்து அங்கிருந்து தற்போது இந்தியாவில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சத்தியமங்கலம் வந்தனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 29,998 கி.மீ., தூரம் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் பயணத்தில் இந்தியா 34 வது நாடாக விளங்குகிறது. 2009 கடைசி அல்லது 2010ஆம் ஆண்டு முதலில்தான் சீனாவை அடைய முடியும் என்கின்றனர் இந்த தம்பதிகள்.

இது குறித்து இவர்களிடம் கருத்துகேட்டபோது அவர்கள் கூறுகை‌யி‌ல், நாங்கள் இந்த உலகில் பிறந்ததற்கு ஏதாவது சாதிக்கவேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி இந்த உலகத்தில் சமாதானம் ஏற்பட்டு ஒற்றுமையாக திகழவேண்டும் என்று வலியுறுத்தி எங்கள் சொந்த நாடான ஹால‌ந்‌தி‌ல் இருந்து சீனாவிற்கு சை‌க்கிள் பயணம் மேற்கொள்ளலாம் என முடிவு செய்து அதை நிறைவேற்றிக் கொண்டுள்ளோம்.

இந்த பயணத்தில் எங்களுக்கு எவ்வித சிரமும் இல்லை. அதே சமயத்தில் பலதரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை காணமுடிந்தது. எங்களுக்கு இந்த பயணம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments