Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சில் துப்பினால் ரூ.50 அபராதம்: சென்னை மாநகராட்சி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (11:42 IST)
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100-ம், எச்சில் துப்பினால் ரூ.50‌ம் அபராதம் விதிக்கும் சட்டத்தை ஏப்ரல் 1‌ம ் தேதி முதல் அமல்படுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மாநகரா‌ட்‌சி மன்ற கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

செ‌ன்ன ை மாநகரா‌ட்‌சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

பொது இடங்களான சாலைகள், நடைபாதைகள், பாலங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்கரைகள், நீர்ஆதாரங்கள், வர்த்தக மையங்கள், அரசு வளாகங்கள் போன்ற பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் உள்பட 24 வகையான தவறுகள் குற்றங்களாக கருதப்படும். அதற்கு அபராதமும் விதிக்கப்படும்.

அதன்படி, கண்ட, கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டினால் ரூ.100-ம், எச்சில் துப்பினால் ரூ.50-ம், பொது இடங்களில் குளித்தாலோ, சிறுநீர், மலம் கழித்தாலோ தலா ரூ.50-ம் அபராதம் வசூலிக்கப்படும்.

அதேபோ ல, பொது இடங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு போட்டால் ரூ.50-ம், பொது இடங்களில் வாகனங்களை கழுவினால் ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

பொது இடத்தில் பாத்திரங்கள் கழுவுதல், துணிதுவைத்தல் மற்றும் பிற பொருட்களை கழுவுதல் ஆகியவற்றிற்கு ரூ.50-ம், கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பவர்கள் பொது இடத்தில் கழிவை போட்டால் ரூ.100-ம் வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு நபரும் அவருக்கு சொந்தமான அல்லது அவரின் உபயோகத்தில் இருக்கும் கட்டிடத்தின் சுற்றுப்பகுதி மற்றும் பொது இடத்தை சுத்தமாக வைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினாலும், சேர்த்து வைத்தாலும் தனியொரு நபருக்கு ரூ.100-ம், குப்பையை தரம் பிரிக்காமல் வழங்குதல் மற்றும் சேர்த்து வைத்தல் மூலம் அதிக அளவில் குப்பையை உருவாக்கினால் ரூ.500-ம், மக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குபவர்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

கட்டிடங்கள் கட்டும்போது அதிக அளவில் குப்பையை உருவாக்குபவர்கள், 6 மாதங்களுக்குள் குப்பையை உரமாக்காமல் இருந்தாலோ அல்லது குப்பையை உரமாக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.100-ம், வீடுகளில் உருவாகும் அபாயகரமான கழிவுகளை குறிப்பிட்ட முறையில் வழங்காதவர்களுக்கு ரூ.500-ம், மருத்துவக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் ஆகியவற்றை பிரித்தெடுத்து வழங்காதவர்களுக்கு தலா ரூ.500-ம், உலர்ந்த கழிவுகளை குறிப்பிட்ட முறையில் வழங்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

தோட்டங்கள் மற்றும் ம ர‌ ங்களில் கத்தரித்த தாவரக் கழிவுகளை குறிப்பிட்ட முறையில் வழங்காதவர்களுக்கு ரூ.1000-ம், குப்பையை குறித்த குப்பை தொட்டியில் அல்லது குப்பை சேகரிப்பு வசதிகளில் போடாமல் பிற இடங்களில் போட்டால் ரூ.100-ம், குப்பைகளை தீயிட்டு கொளுத்தி அழிப்பவர்களுக்கு ரூ.500-ம், மீன் மற்றும் கோழிப்பண்ணை மற்றும் இறைச்சிக் கழிவுகளை மற்ற குப்பையிலிருந்து பிரிக்காமல் (இல்லங்களில் உருவாகாத) வழங்குபவர்களுக்கு ரூ.500-ம், குப்பை கூடை இல்லாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு ரூ.100-ம், குப்பையை தரம் பிரித்து வழங்காத வியாபாரிகளுக்கு ரூ.100-ம், வீட்டின் அருகாமையை தூய்மையாக வைத்திருக்காதவர்களுக்கு ரூ.1000-ம், குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கும் இல்லத்தாருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டம் குறித்து 2 மாதங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 1‌ம ் தேதி முதல் சென்னையில் இந்த சட்டம் அமல் படுத்தப்படும்.

இ‌வ்வாற ு அ‌ந் த ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments