Webdunia - Bharat's app for daily news and videos

Install App

900 கோ‌யி‌ல் தேர்களை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: பெரிய கருப்பன்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (09:52 IST)
'' தமிழ்நாட்டில் 900 க ோ‌ய ில் தேர்களை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உ‌ள்ளது'' என்று இ‌ந்து சமய அற‌நிலைய‌‌த்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

காஞ ்‌‌ச ிபுரம் வரதராஜ பெருமாள் க ோ‌ய ில் திருப்பணி தொடக்க விழா பெய‌ர் பலகையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்து ப ேசுகை‌யி‌ல், தமிழ்நாட்டில் உள்ள க ோ‌ய ில்களில் ஓடாத நிலையில் உள்ள தேர்களை சீரமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து, 900 க ோடி‌ய ில் தேர்களை சீரமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து க ோ‌ய ில் திருக்குளங்களையும் தூர் வாரி புதுப்பிக்க, ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள சாலைகள், சுற்றுல ா‌த ்துறை மூலம் சீரமைக்கப்படும்.

சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில், தமிழக கோவில் திருப்பணிக்காக ர ூ.3 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2007ஆம் ஆண்டு மட்டும், தமிழ்நாட்டில் கோவில் திருப்பணிக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 960 கோவில்களில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது எ‌ன்று அமை‌ச்ச‌ர் பெ‌ரியகரு‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments