Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு‌க்கு தடை ‌‌நீ‌ங்குமா? நாளை தெ‌ரியு‌ம்!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (11:50 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை ‌உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் நீக்குமா? என்பது நாளை தெரியும்.

மதுர ை மாவட்டம ் அலங்காநல்லூர ், பாலமேட ு உட்ப ட தென்மாவட்டங்களில ் பொங்கல ் பண்டிகையையொட்ட ி வீ ர விளையாட்டா ன ஜல்லிக்கட்ட ு ஆண்டுதோறும ் நடத்தப்பட்ட ு வந்தத ு. இ‌ந்த ஆ‌ண்டு ஜல்லிக்கட்ட ு நடத் த உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌ம் தடை ‌வி‌தி‌த்தது. இ‌ந்த தீர்ப்பால் அலங்காநல்லூர ், பாலமேட ு பகுத ி மக்கள ் அதிர்ச்ச ி அடைந்தனர ்.

பொங்கலையொட்டி உற்சாகத்துடன் க ாணப்படும ் அந் த ஊர்கள ் தற்போத ு களையிழந்து இரு‌க்‌கிறது. காணப்படுகின்ற ன. ஜல்லிக்கட்டுக்க ு விதிக்கப்பட் ட தட ை நீடிக்கப்பட்டத ை ஆட்சேபித்த ு அப்பகுத ி மக்கள ை கடைகள ை அடைத்த ு உண்ணாவிரதம ் உள்ளிட் ட போராட்டங்கள ை நடத்தினர ். தென்மாவட்டங்களில ் பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தியுள் ள இந் த பிரச்சனையில ் அரச ு தலையிட்ட ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு அரசியல ் கட்ச ி தலைவர்களும ் வலியுறுத்தியுள்ளனர ்.

இ‌ந்த ‌ நிலை‌யி‌ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று டெல்லி செ‌ன்றன‌ர். நேற்று விடுமுறை நாள் என்பதால், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வழ‌க்க‌றிஞ‌ர் வி.ஜி.பிரகாசம் நே‌ற்று இரவு 7 ம‌ணி‌க்கு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நாளை (15ஆ‌ம் தே‌தி) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வழ‌க்‌க‌றிஞ‌ர் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார். எனவே, ஜல்லிக்கட்டுக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌ம் விதித்த தடை நீங்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments