Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட‌ர் மழையா‌ல் 500 குள‌ங்க‌ள் ‌நி‌ர‌ம்‌பியது!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (17:47 IST)
கட‌ந் த 2 நா‌‌ட்க‌ள ் பெ‌ய் த தொட‌ர ் மழையா‌ல ் செ‌ன்ன ை ம‌ற்று‌ம ் கா‌‌ஞ்‌சிபுர‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ் மா‌வ‌ட்ட‌ங்‌க‌‌ளி‌‌ல ் 500‌ ‌ சி‌றி ய குள‌ங்க‌ள ் ‌ நி‌ர‌ம்‌ப ி உ‌ள்ளத ு. செ‌ன்னை‌க்க ு கு‌டி‌நீ‌ர ் தரு‌ம ் புழ‌ல ் ஏ‌ர ி ‌ நிர‌ப்‌ப ி வழ‌ி‌கிறத ு.

தமிழக‌த்து‌க்கு‌ம ் இலங்கைக்கும் இடையே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாட்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ ்‌ சிபுரம் மாவட்டங்களில் உ‌ள் ள ஏரிகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் அதிக மழை பெய்ததால் 500 சிறிய ஏரி குளங்கள் நிரம்பி விட்டன.

திருவள்ளூரில் நேற்றிரவு 60 மி.மீட்டர் மழையும ், பொன்னேரியில் 75 மி.மீ. மழையும ், சோழவரத்தில் 79 மி.மீட்டரும், தாமரை பாக்கத்தில் 75 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் பெரிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி நிரம்பி விட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. தற்போது 34.95 அடி அளவு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1434 கனஅடி தண்ணீர் வருவதால் 994 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் புழல் ஏரிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்ததால் மாலை 4 மணிக்கு ‌வினாடி‌க்க ு 700 கனஅட ி த‌ண்‌ணீ‌ர ் திறந்து வி ட‌ ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் கரையோர மக்களுக்கு வெ‌ள் ள எச்சரிக்கை விடப்பட்டு‌ள்ளது. அதன் பிறகு ஏரிக்கு ‌நீ‌‌ர ் வரத்து குறைந்த ஏ‌ர ி அடை‌க்க‌ப்ப‌ட்டத ு. குடிநீருக்க ு மட்டும் 130 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. 21.2 அடி உயரம் உள்ள புழல் ஏரியில் த‌ற்போத ு 21.14 அடிக்கு தண்ணீர் உள்ளது.

சோழவரம் ஏரிய ி‌ ன ் முழ ு கொ‌ள்ளளவ ு 18.86 அட ி. தற்போது 17.86 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடிக்கு 22 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த ஏரி நிரம்ப இன்னும் 2 அடி தான் தேவை என்பதால் நீர் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில் இன்றும் கனமழை பெய்தால் ஏரிகளை திறக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் ஒவ் வொரு ஏரிகளையும் ‌தீ‌விரமா க கண்காணித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments