Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் அ‌ஞ்ச‌ல் தலை‌க் க‌ண்கா‌ட்‌சி: அமை‌ச்ச‌ர் இராசா துவ‌க்‌கி வை‌த்தா‌ர்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (18:12 IST)
சென்ன‌ை‌யி‌ல் முத‌ல் முறையாக ம‌த்‌திய அர‌‌சி‌ன் சா‌ர்‌பி‌ல் அ‌ஞ்ச‌ல் தலை‌க் க‌ண்கா‌ட்‌சி நட‌க்‌கிறது.

எழும்பூரில் உ‌‌ள்ள ராணி மெய்யம்மை - ராஜா முத்தையா மண்டபத்தில் இந்திய அஞ்சல் தலை கண்காட்சி - இன்பெக்ஸ் 2008 எ‌ன்ற பெய‌‌ரி‌ல் நட‌க்கு‌ம் இக்கண்காட்சியை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இராசா திறந்து வைத்தா‌ர்.

முன்னதாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் மிக அரிய வகை வண்ணத்து பூச்சிகளின் உருவம் பொறித்த நான்கு அஞ்சல் தலை வரிசையையும், "இந்திய அஞ்சல் தலைகளில் 1857" என்ற புத்தகத்தையும் அமைச்சர ் இராசா வெளியிட்டார்.

இக்கண்காட்சியில் அஞ்சல் தலை அச்சுக் கூடம், ராணுவ அஞ்சல் பிரிவு, தேசிய அஞ்சல் அரும்பெரும் காட்சியகம் ஆகியவற்றின் மிக அரிய அஞ்சல் தலைகள் மற்றும் இளைஞர் சேமிப்பு, பள்ளி சேமிப்பு குறித்த தபால் தலைகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக பென்னி பிளாக் (சிவப்பு மற்றும் கருப்பு) உலகின் முதல் அஞ்சல் தலை, சிந்து அஞ்சல் (கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் நீளம்) இந்தியாவின் முதல் அஞ்சல் தலை, சுதந்திர தினத்தின் முதலாம் ஆண்டையட்டி காந்தியடிகள் உருவம் கொண்ட நான்கு அஞ்சல் தலைகள் வரிசை, சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதரகத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதரால் வெளியிடப்பட்ட அச்சின் மேல் அச்சு பதிந்த மாதிரி அஞ்சல் தலை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஒரு சிறப்பு தபால் உறை வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கான வினா விடை, ஓவியம் வரைதல், அஞ்சல் தலை சேகரிப்பில் நவீன நுட்பங்கள் குறித்து திறன்மிகு வல்லுனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். தபால் தலைகள் மற்ற பொருட்கள் ஆகியவை இந்தியா முழுவதிலிருந்தும் வந்துள்ள விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இக்கண்காட்சி இன்று (02.01.2008) முதல் 06.01.2008-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 7 மணி வரை பொது மக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments