Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌ர் அ‌திப‌ர்க‌ள் ‌சிமெ‌ன்‌ட் ‌விலையை குறை‌க்காவ‌ி‌ட்டா‌ல் நாட‌்டுடமை : த‌மிழக அரசு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:40 IST)
தனியார் சிம ெ‌ ன்ட் அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன் வரவில்லை என்றால், பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமெ‌‌ன்ட் தொழிற் சாலைகளை அரசே நாட்டுடைமையாக்கிட நடவடிக்கையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று த‌மிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல ், பொதுமக்கள் பாதிக்காத அளவிற்கு சில்லறை விலையில் சிம ெ‌ ன்ட்டை வழங்குவது குறித்து இன்று (2.1.2008) காலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி, கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், உணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு சிம ெ‌ ன்ட் நிறுவனத் தலைவர், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன் விவாதித்தார்.

அ த‌ ன ் ‌ பி‌ன ் எடு‌க்க‌‌ப்ப‌ட் ட முடி‌வி‌ல ், உடனடியாக ஒரு லட்சம் டன் சிம ெ‌ ன்டை மத்திய அரசின் கனிமப்பொருட்கள் மற்றும் உலோகங்கள் வணிகக் கழகம் (எம்.எம்.டிசி.) மூலம் அரசு நிறுவனமான டான்செம் இறக்குமதி செய்வதற்கான ஆணையை இன்றைய தினமே பிறப்பிப்பது என்றும், இவ்வாறு இறக்குமதி செய்யப் படும் சிமெ‌ன்டை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் 200-க்கு மேற்பட்ட மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து நேரடியாக நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி விற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டான்செம் தேவைக் கேற்ப நேரடி ஒப்பந்தப்புள்ளி மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டினை விரைவு படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் பிறகு தனியார் சிமெ‌‌ன்ட் அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன் வரவில்லை என்றால், பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமெ‌ன்ட் தொழிற் சாலைகளை அரசே நாட்டுடைமையாக்கிட நடவடிக்கையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லைஎன்றும் இந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments