Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, மாயாவ‌தி வ‌ழி‌யி‌ல் ஆ‌ட்‌சியை‌ப் ப‌ிடி‌ப்பே‌ன்: ‌விஜயகா‌ந்‌த்!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (11:56 IST)
தே‌‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி அமை‌க்கு‌ம் வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌ன்று‌ம ், நரே‌ந்‌திர மோட ி, மாயாவ‌தி வ‌ழி‌யி‌ல் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்க‌ப் போவதாகவு‌ம் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

இதுகு‌‌றி‌த்து நா‌ளித‌ழ் ஒ‌‌ன்றிற்‌க்கு அவ‌ர் அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், " மோடியும் மாயாவதியும் சாதாரண ஏழை மக்களையே சார்ந்து நின்றனர். இதுவே அவர்களுக்கு தேர்தலில் மக்கள் வெற்றியைத் தந்தனர். ஆனால் நா‌ன் அரசியல் ஆதாயத்துக்காக ஜாத ி, மத இன பிரசாரத்தை பயன்படுத்த மாட்டேன ்" எ‌ன்றா‌ர்.

காங்கிரசுடன் விஜயகாந்த் கூட்டு வைத்துக் கொள்வார் என்று வெ‌ளியான செ‌ய்‌திக‌ள் பற்றி அவ‌ர் பதிலளிக்கை‌யி‌ல ், " சோனியா காந்தியைய ோ, அல்லது தி.மு.க. தலைவர் கருணாநிதியையோ நான் சந்திக்கவில்லை. அவர்களும் என்னை சந்திக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அவர்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சி மேலிடம்தான் அவர்களுக்கு உத்தரவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம ்" எ‌ன்றா‌ர்.

உங்கள் தலைமையிலான கூட்டணியை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளும ா? எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, " மதவாத கட்சியுடனும் ஜாதி அடிப்படையிலான கட்சியுடனும் நான் கூட்டணி அமைக்கப் போவதில்லை. இது இறுதியானத ு" எ‌ன்றா‌ர்.

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்ச ி, கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்டு பிளாக ், ம.தி.மு.க., பா.ம.க. ஆகியவற்றுடன் கூட்டு உண்ட ா? எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, " முத‌லிர‌ண்டு க‌ட்‌சிகளை‌ப் பொறு‌த்தவரை அரசியலில் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பதையும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்களா என்பதையும் முதலில் அவர்கள் நிரூபிக்கட்டும். மேலு‌ம், அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொள்ளும் கட்சிகளுடன் தே.மு.தி.க. உறவு வைத்துக் கொள்வது இல்ல ை" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், " எனது பலத்தை நான் உணர்ந்து இருக்கிறேன். மக்கள் நம்பிக்கையும் எனக்கு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை நான் மதிக்கிறேன்.

தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு கூட்டணி ஆட்சி என்ற நிலை இருந்தது ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் மாயாவத ி, மோடி ஆகியோர் அந்த நிலையை மாற்றி இருக்கிறார்கள ்" எ‌ன்றா‌ர் விஜயகாந்த்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments