Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லா‌க் குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌ம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உறு‌தி!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (12:00 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி இ‌ல்லாத எ‌ல்லா‌க் குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌ம் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது:

2006- ஆம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க.அரசு சார்பில் கடந்த 2 ஆண்டு காலமாக வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக அவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறோம். ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றி ஏற்கனவே ஆட்சியிலே இருந்தவர்களும், புதிதாக ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தைப்பற்றி விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், 13-5-2006 அன்று தி.மு.க. அரசு அமைந்த சில நாட்களில் அதாவது 24-5-2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஆளுநர் உரையிலும், அதனைத் தொடர்ந்து 2006-2007-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1-6-2006 அன்று இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, பயனாளிகளைத் தேர்வு செய்ய குழுக்கள், வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிக்கான குறியீடுகளை மேற்கொள்ள நிபுணர் குழு ஆகியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பயனாளிகளைக் கண்டறிவதற்காக 20-6-2006 அன்று ஒவ்வொரு ஊராட்சியிலும், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், மக்கள் நலப் பணியாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்திட ஆணையிடப்பட்டது.

எனது தலைமையில் மாநில அளவில் சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி வழங்கும் குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு 22-6-2006 அன்று அமைக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சி.கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் வை.சிவபுண்ணியம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் வாசித், புரட்சி பாரதம் சட்டமன்ற உறுப்பினர் மு.ஜகன்மூர்த்தி. விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற கட்சித் தலைவர் கு.செல்வம ்.

அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற மறுத்துவிட்டனர். தற்போது இந்தத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகளைக் காட்டிவரும் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் கட்சிப் பணிகள் காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் குழுவில் இடம்பெற இயலாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இவர் அந்தக் குழுவிலே அப்போது இடம்பெற ஒப்புக் கொண்டிருந்தால், தற்போது இந்த எதிர்ப்புகளை எல்லாம் தெரிவிக்கவேண்டிய சிரமம் அவருக்கு வந்திருக்காது.

முதற்கட்டமாக 2006 செப்டம்பர் மாதத்திற்குள் 30 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை எல்காட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்திட 30-6-2006 அன்று ஆணை வெளியிடப்பட்டது. 30 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் நிறுவனம், தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளிகளை 24-7-2006 அன்று மாலை வரை பெற்று, அன்றே அவைகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சிகள் வழங்கும் குழுவின் 2-வது கூட்டம் என்னுடைய தலைமையில் 27-7-2006 அன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.2,965 என்ற விலையில் 15 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சிகளையும், மும்பையில் உள்ள கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ரூ.2,965 என்ற விலையில் 7,500 வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சிகளையும், நொய்டாவில் உள்ள டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.2,965 என்ற விலையில் 7,500 வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சிகளையும், குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க முன்வந்தன.

இந்த முடிவுகளைச் சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நீண்ட நேரம் விவாதித்து ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 2006-07 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவாறு ரூ.750 கோடி செலவில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள் வழங் க, 22.11.2006 அன்று மாலை 5 மணிக்கு எனது தலைமையில், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் 25 லட்சம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள் கொள்முதல் செய்வதற்காக-உலகளாவிய 9 நிறுவனங்களிலிருந்து வரப்பெற்ற விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டன.

குறைந்த விலைப்புள்ளி (எல்.1.) குறிப்பிட்ட டிக்சன் நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிக்கான இறுதி விலையை நிர்ணயம் செய்தபின், மற்ற ஒப்பந்ததாரர்களிடம் இறுதி விலைப்புள்ளிக்கு வழங்க ஒப்புதல் பெற்று, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எத்தனை எண்ணிக்கையில், கொள்முதல் செய்யலாம் என்பது குறித்து 24.11.2006 அன்று காலை 11.30 மணி அளவில், குழு கூடி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறைந்தபட்ச விலை ரூ.2,740 எனத் தெரிவித்த டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்து 9 லட்சம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளும், ஏர்விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2 லட்சம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளும் கொள்முதல் செய்வதென்றும் அந்த நிறுவனம் 3 மாத காலத்திற்குள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக 3 லட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை கொள்முதல் செய்வதென்றும், எல்.பி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 2 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதென்றும், வீடியோகான் கம ் ïனிகேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 லட்சம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் என வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை கொள்முதல் செய்வதென்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இரண்டாம் கட்டமாகத் தமிழகம் முழுவதும் ரூ.885 கோடி செலவில் கொள்முதலாகும் 25 லட்சம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் 15.2.2007 அன்று திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் கிராமத்தில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதிலுமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, 13.12.2007 வரை 24 லட்சத்து 48 ஆயிரத்து 698 இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த 2007-08-ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.750 கோடி மூலம், மேலும், 30 லட்சம் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச அளவில் விலைப்புள்ளிகள் கோரப்பட்டு, வரப்பெற்ற 22 ஒப்பந்தப் புள்ளிகளும் 15.10.2007 அன்று முறைப்படி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும், குழுவினர் முன்னிலையிலும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் திறக்கப்பட்டன.

இந்த 22 நிறுவனங்களில், தொழில் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி முழுவதும் நிறைவு செய்த 17 நிறுவனங்கள் அடுத்த கட்டமான விலைப்புள்ளிகளைத் திறக்கும் கட்டத்திற்குத் தகுதி பெற்றன. ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை நிறைவு செய்யாத நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன.

18.10.2007 அன்று என்னுடைய தலைமையில், சட்டமன்ற பிரதிநிதிகள் குழு தலைமைச் செயலகத்தில் கூடியது. 17 ஒப்பந்ததாரர்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டதில், குறைந்தபட்ச விலைப்புள்ளியான ரூ.2,197-ஐ அளித்த வீடியோகான் நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிக்கான இறுதி விலையை நிர்ணயம் செய்தபின், மற்ற ஒப்பந்ததாரர்களிடம் இறுதி விலைப்புள்ளிக்கு வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை வழங்க ஒப்புதல் பெற்று எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு கொள்முதல் செய்யலாம் என்பது குறித்து 19.10.2007 அன்று கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 19.10.2007 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டு வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிக்காகப் பெறப்பட்ட விலைப்புள்ளிகள் கடந்த ஆண்டைவிட குறைவாக இருந்ததால் அரசுக்கு ரூ.162.90 கோடி சேமிப்பு ஏற்பட்டது. அந்த சேமிப்பையும் பயன்படுத்தி மொத்தம் 34 லட்சத்து 25 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை ஒன்று ரூ.2,197 விலையில் கொள்முதல் செய்திட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அந்த முடிவின்படி, வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 20 லட்சம், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம், டிக்சன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம், ஏர்விஷன் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம், எல்.பி. எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம், டிரென்ட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், ஜீனஸ் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், பெல்டெக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், பாரதி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், எம்.ஐ.சி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், மல்கோத்ரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம், ஈஸ்ட் இந்தியா பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 34 லட்சத்து 25 ஆயிரம் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெறுகிறது.

இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டி இல்லாத எல்லாக் குடும்பங்களுக்கும், வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகள் இலவசமாக வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை சிலர் விற்றுவிடுவதாக புகார்கள் வந்ததின் பேரில் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை பணிக்கப்பட்டு, அவர்களும் அவ்வாறே தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழகம் முழுவதும் சோதனை நடத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

சென்னையில், காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சில் குமரன் உத்தரவுப்படி, இணை ஆணையர்கள் ரவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர். வண்ணாரப்பேட்டை, அசோக்நகர், செரியன் நகர் ஆகிய இடங்களில் 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளும், ஒரு ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டன.

எழும்பூரை சேர்ந்த இருவரிடமிருந்து 4 வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளும், ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. ரிச்சி தெருவில் சிலரிடமிருந்து 9 இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சில் குமரன், `பொது மக்களிடமிருந்து அவர்களை ஏமாற்றி ஆசை காட்டி, இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை யாராவது வாங்கினால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது' என்று தெரிவித்திருக்கிறார்.

லட்சக்கணக்கான இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெட்டிகளை ஏழைகளின் நலன் கருதி அரசு வாங்கி, இவ்வாறு குழுக்களை அமைத்து விநியோகிக்கும் நிலையில் ஒன்றிரண்டு இடங்களில் தவறுகள் ஏற்படுவதை எடுத்துக்காட்டி திட்டமே சரியில்லை என்று எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல என்பதை எடுத்து கூறுவதற்காகத்தான் இத்தனை விளக்கங்களையும் தெரிவித்திருக்கின்றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments