Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழக்கு விசாரணை நேரம் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:30 IST)
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையின் வழக்கு விசாரணை நடத்தும் நேரம் ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது வரு‌ம் பு‌த்தா‌ண்டு முத‌ல் அமலுக்கு வருகிறது.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், மதுரை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற கிளையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் ‌ நீ‌திம‌ன்ற‌ங்‌க‌ள் இயங்கி வந்தன. வேலை நாட்களை ஈடு செய்ய சில சனிக்கிழமைகளிலும் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இயக்கப்பட்டு வந்தன. வரும் புத்தாண்டு முதல் சனிக்கிழமைகளில் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இயங்குவது குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 5 ஆ‌ம் தேதியும், செப்டம்பர் மாதம் 6 ஆ‌ம் தேதியும் உள்ள சனிக்கிழமைகளில் மட்டும் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இயங்கும். மற்ற சனிக்கிழமைகளில் வழக்கப்படி விடுமுறையாகும். சில சனிக்கிழமைகளில் உய‌ர் ‌நீ‌திம‌ன்‌ற‌‌ங்க‌ள் இயங்கி வந்ததை 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் புத்தாண்டு முதல் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம், மதுரை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற கிளைகளில் விசாரணை நடைபெறும். அதாவது, வழக்கு விசாரணை நடைபெறும் நேரம் 15 நிமிடம் நீடிக்கப்பட்டுள்ளது.

வரும் 2008 ஆ‌ ம் ஆண்டில் மே மாதம் 1 ஆ‌ம் தேதி முதல் ஜ ூன் மாதம் 8 ஆ‌ம் தேதி முடிய கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்தகால கட்டத்தில் விடுமுறை கால ‌ நீ‌திம‌ன்ற‌ம் மட்டும் இயங்கும். இதேபோல, அக்டோபர் மாதம் 1 ஆ‌ம் தேதி முதல் 12 ஆ‌ம் தேதி முடிய தசரா விடுமுறை விடப்படுகிறது. இந்தகால கட்டத்தில், விடுமுறை கால ‌ நீ‌‌திம‌ன்ற‌ம் மட்டும் இயங்கும். டிசம்பர் 24 ஆ‌ம் தேதி முதல் 31 ஆ‌ம் தேதி முடிய கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments