Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.17,000 கோடி‌யி‌ல் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்க‌ள் விரிவாக்கம் : டி.ஆர்.பாலு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:05 IST)
'' சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமு க‌‌ங்க‌ள் ரூ.17 ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளத ு'' என்று மத்திய க‌ப்ப‌ல், சாலை‌ப் போக‌்குவர‌த்து ம‌ற்று‌ம் நெடு‌‌ஞ்சாலை‌த்துறை அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறினார்.

குமரி மாவட்டம ், குழித்துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு ‌ திற‌ந்து வை‌‌த்து செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், சேது சமுத்திர திட்டம் கடந்த 3 ஆண்டு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இது முடிவடைய இன்னும் ஒரு ஆண்டு ஆகும்.

இந்தியாவில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கோடி செலவில் சாலைப்பணிகள் செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 4 வழி சாலைகள், புறவழி சாலைகள், விரிவாக்க சாலைகள் இதில் அடங்கும். இந்த பணிகளை 2015ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தங்க நாற்கர சாலை திட்டம் 3-வது கட்டமாக ஏறத்தாழ 12 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழி சாலைகள் இந்தியா முழுவதும் அமைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களையும் ரூ.17 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த புதிய திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் ரப்பர் சாலைகள் போடும் திட்டங்கள் இல்லை. தற்போது போடப்படும் 4 வழி சாலைகளில் எந்த சாலையும் மழையால் பாதிக்கப்படவில்லை. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி 4 வழி சாலைக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments