Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌ம‌ர்ம சாவு கு‌றி‌த்து நீ‌தி‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் : வெ‌ள்ளைய‌ன்!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (16:30 IST)
வடபழனி காவ‌ல் நிலையத்தி‌ற்கு விசாரணைக்கு அழை‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட தே‌‌னி‌ர் கடைக்காரரின் ம‌ர்ம சாவு கு‌றி‌த்து நட‌த்த‌ப்படு‌‌ம் கோ‌ட்ட வருவா‌ய் அலுவல‌‌ர் ‌விசாரணை க‌ண்துடை‌ப்பு எ‌ன்று‌ம ், இது தொட‌ர்பாக ‌நீ‌தி ‌விசாரணை நடத்த‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவை தலைவ‌ர் த.வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று த‌மி‌ழ்நாடு வ‌ணிக‌ர் ச‌ங்க‌ங்க‌ளி‌ன் பேரவை தலைவர ் த ா. வெள்ளையன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல ், கேரளாவை சே‌ர்‌ந்த சைய‌த் அ‌லி எ‌ன்பவ‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் ‌‌விசாரணைக்கு அழை‌த்து‌ச் செ‌ன்று அடி‌த்து‌க் கொ‌ன்று‌‌ள்ளன‌ர். இ‌ப்படி நட‌க்கு‌ம் ‌சில ச‌ம்பவ‌ங்களா‌ல் ஓ‌‌ட்டு மொ‌த்த காவ‌ல்துறை‌‌யின‌ரி‌ன் ம‌தி‌ப்பு‌ம் கெ‌ட்டு‌‌ப்போ‌கிறது.

இச்சம்பவ‌ம் தொட‌ர்பாக இடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ள காவ‌ல்துறை‌யினரை ‌நிர‌ந்‌தரமாக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம். மேலு‌ம் அவ‌ர்க‌ள் மீத ு கொல ை வழக்க ு பதிவ ு செய் ய வேண்டும ்.

இது தொட‌ர்பாக நட‌த்த‌ப்படு‌ம் கோ‌ட்ட வருவா‌ய் அலுவல‌ர் (ஆ‌ர்.டி.ஓ.) ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது வெறு‌ம் க‌‌ண்துடை‌ப்ப ு. இ‌வ்வழ‌க்‌கி‌ல் உ‌ண்மையை ‌நிலையை க‌ண்ட‌றிய கேரளா‌வி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள கூ‌ட்டு நடவடி‌க்கை குழு த‌மிழக அரசை வ‌லியுறு‌த்த உ‌ள்ளது.

இ‌ந்த ச‌ம்பவ‌ம் தொட‌ர்பாக ‌நீ‌தி ‌விசாரணை கோ‌ரி வணிகர ் சங் க பேரவையின ் சார்பில் டிச‌ம்ப‌ர் 20ஆ‌ம் தேதி செ‌ன்னை‌யி‌ல் ஒரு நா‌ள் கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடத்த‌ப்ப‌டு‌ம். அ‌த‌ன் ‌பி‌ன்னரு‌ம் எ‌ங்க‌ள் கோரிக்கைக்க ு அரச ு செவ ி சாய்க்கவில்ல ை என்றால் டிச‌ம்பர் 31ஆ‌ம் தேதி காவ‌ல்துறை ஆணைய‌ர் அலுவலகத்தின ் முன்ப ு முற்றுகைப ் போராட்டம ் நடத்தப்படும ். இது தொட‌ர்பாக முதலமை‌ச்சரை ச‌ந்‌தி‌க்க இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments