Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரிக்கரையில் கல்லூரி க‌ட்டியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ராமதாஸ்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (10:12 IST)
'' ஏரிக்கரையில் கல்லூரி கட்டினேன் என்பதை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் க ூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வ ெளியிட்டுள்ள அறிக்கையில ், ‌ம ின் உற்பத்தி செய்யக்கூடாது; துணை நகரங்களை அமைக்க கூடாது; விமான நிலையத்தை விஸ்தரிக்க கூடாது; சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க கூடாது; புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று நான் பேசி வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வீண் பழி சுமத்தியிருக்கிறார். மின் உற்பத்திக்கான புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.

மின் பற்றாக்குறை என்பது திடீர் என்று ஒரே நாளில் ஏற்படுவதல்ல. மின்தேவையை எதிர்பார்த்து திட்டமிட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது யாருடைய தவறு?. இதற்கு விளக்கம் கேட்டால் ஏட்டிக்குப் போட்டி என்ற வகையில் ஏரிக்கரை விளை நிலங்களில் கல்லூரியை கட்டலாமா? என்று கூறி பிரச்சினையை திசை திருப்பப்பார்க்கிறார்.

கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மாநிலத்திலேயே மிக மிக பின்தங்கிய மாவட்டங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது விழுப்புரம். அந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மிக பின்தங்கிய வன்னிய மக்கள் சேர்ந்து தொடங்கப்பட்டுள்ள கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது அந்த கல்லூரி. அங்கே பயிற்சி பெறுகிற மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

அந்த கல்லூரி அமைந்துள்ள இடம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடப்படாமல் கரம்பாகக் கிடந்த களர் நிலம். அதற்கு ஏரி பாசனம் என்பதே இல்லை. எனவே, அமைச்சருக்கு சவாலாக ஒன்றைக் கூறுகிறேன். அமைச்சர் பழி சுமத்தி இருப்பதைப்போல அந்தக் கல்லூரி ஏரிக்கரையின் கீழ் உள்ள விளை நிலங்களில் அமைந்திருக்கிறது என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலக நான் தயார். அப்படி நிரூபிக்கத் தவறினால் பாவம் அந்த அமைச்சர் அரசியலில் நீடித்துவிட்டு போகட்டும். குறைந்தபட்சம் மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும். இதற்கு அமைச்சர் தயாரா? எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments