Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ப்போது தே‌‌ர்த‌ல் வ‌ந்தாலு‌ம் தனித்தே போட்டி : சரத்குமார்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (11:21 IST)
'' எ‌ப்போது தே‌ர்த‌ல் வ‌ந்தாலு‌ம் அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ‌ம‌க்க‌ள் க‌ட்‌சி த‌னி‌த்தே போ‌ட்டி‌யிடு‌ம்'' எ‌ன்று அ‌க் க‌ட்‌சி‌யி‌‌ன் தலைவ‌ர் சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், கட்சியின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் ஜனவரி 20 ஆ‌ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மின் தடை உள்ளது. மின்சாரத்தை பொறுத்தவரையில் தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை, அன்றாட தேவைக்கு எவ்வளவு தேவை என சரியான திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

எந்த அரசாக இருந்தாலும் தொலைநோக்குடன் செயல்படவேண்டும். எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அது 5 ஆண்டுகள் இருக்கவேண்டும ். தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தனித்து நின்று செயல்படுவோம். கூட்டணி எங்களுக்கு தேவை இல்லை. தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்.

தமிழகத்தில் வன்முறை அரங்கேறி வர ுவதா‌ல் சட்டம்-ஒழுங்கை தெரிந்து கொள்ளலாம். 1976ஆம் ஆண்டு லாரிகளுக்கான தேசிய பெர்மிட்டுக்கு ரூ.500 கட்டணம் இருந்தது. இப்போது ரூ.2,500 ஆக உள்ளது. அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதை ஒரே தொகையாக நிர்ணயம் செய்யவேண்டும் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments