Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியல் தவறான தகவல் கொடுத்தால் நடவடிக்கை: நரேஷ்குப்தா!

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (12:19 IST)
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல ், நீக்கலின் போது தவறான தகவல் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும ் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

‌ திரு‌ச்‌சி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் நியாயமாகவும், பயமின்றியும் நடக்க வேண்டும் என அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட ்டு‌ள்ளது. யாராவது வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தவறான தகவல்களை தெரிவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்) நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது இந்தியாவில் தங்கி இருந்திருக்கவேண்டும். அப்போது தான் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும், இல்லையேல் அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது. திருவிழா நேரத்திலும், தேர்தல் நேரத்திலும் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வருவோரை சேர்க்க முடியாது.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11 ஆ‌‌ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஓரிரு மாதங்கள் காலதாமதமாகலாம். ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் வாக்காளர் பெயர் பதிவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது எ‌ன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments